மேலும் அறிய

Vetrimaran: ”இயக்குநரா, என்ன தோணுதோ அதைச் செய்” என இளையராஜா சொன்னார் - மனம்திறந்த வெற்றி மாறன்

Vetrimaran: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதையடுத்து, இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் வெற்றி மாறன் கலந்துகொண்டு பேசினார்.

தமிழ் சினிமாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 20ஆம் தேதி மதியத்தில் இருந்து மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி என்றால் அது, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது தொடர்பாகத்தான்.

இந்த படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இந்த படத்தினை தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது, ”இளையராஜாவைப் பற்றி நான் என்ன பேச நினைத்தேனோ அவற்றையெல்லாம் எனக்கு முன் பேசிய அனைவரும் பேசிவிட்டனர். எனக்கு இளையராஜா பாடலை எப்போது கேட்டாலும், அது தாயின் அன்பைப் போல் மனதுக்குள் அப்படியே இருக்கும். இளையராஜா சாருடன் பழகுவது மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் எந்தவித குழப்பமும் இல்லாமலும் ஒரு நண்பருடன் பழகுவதைப்போல் இருக்கும். இந்த மேடையில் நண்பர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் காரணம், அவர் இயக்குநரை நட்புணர்வுடனே அணுகுகின்றார். இதனால் தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். 

இளையராஜா சார் விடுதலை படத்தை பார்த்துவிட்டு அவருக்கு ஒன்று தோன்றுவதாகக் கூறி என்னிடம் அவருடைய கருத்தைக் கூறினார். மேலும் ஒரு இசையமைப்பாளராகத்தான் இதைக் கூறுகின்றேன். ஒரு இயக்குநராக உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய் எனக் கூறினார். அவருடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இளையராஜாவின் மியூசிக் எப்போதும் மேஜிக்தான். அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகின்றது என்றால் அது மிகப்பெரிய விஷயம். அந்த படத்தைப் பார்க்க உங்களைப்போல நானும் ஆவலுடன் இருக்கின்றேன்” எனக் கூறினார். 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget