![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Venkat Prabhu | "மிஸ் யூ சிம்பு" "லவ் யூ அப்துல் காலிக்” - வெங்கட் பிரபு பதிவிட்ட எமோஷ்னல் போஸ்ட்
மிஸ் யூ எஸ்டிஆர். லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக் - வெங்கட் பிரபு
![Venkat Prabhu | Venkat prabhu tweet about simbu for maanaadu victory Venkat Prabhu |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/21/32287dc54b47d96dfb4ea6632f21c602_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தை இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பல தடங்கள்களுக்கு பின் வெளியான இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் சூழலிலும் தற்போதுவரை பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதை முன்னிட்டு, இன்று சென்னையில் மாநாடு படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சிம்பு மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வேறொரு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், கோலிவுட்டில் தனக்கு கம்பேக் கொடுத்த படத்தின் வெற்றி விழாவில் சிம்பு நிச்சயம் கலந்துகொண்டிருக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ. சந்திரசேகரனும், இந்தப் படம் சிம்புவுக்கு ஒரு பெரிய திருப்புமுனை. இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும் என பேசியிருந்தார்.
Missed u STR!! Love u so much my #abdulKhaliq #SilambarasanTR #MaanaaduSuccessMeet
— venkat prabhu (@vp_offl) December 21, 2021
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ் யூ எஸ்டிஆர். லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: CM stalin On Shanmuganathan | உழைப்பு, உண்மை, அர்ப்பணிப்பு.. சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி.. கண்ணீர் சிந்திய முதலமைச்சர் ஸ்டாலின்
கோவையில் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு..!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: லண்டனுக்கு பறந்த டீம்.. சந்தோஷ் நாராயணன் கம்போஸிங்.. போட்டோ வைரல்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)