மேலும் அறிய

STR in VTK: வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்ஸ்பாட் ஷாட்ஸை வெளியிட்ட சிம்பு..

STR in VTK: வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்ஸ்பாட் ஷாட்களை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 STR in VTK: விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2-ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான ஷாட்களை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கமல் ரீமேக் படத்தில் சிம்பு :

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசுகையில் " நான் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். உங்கள் ரீ மேக் படத்தில் நான் நடிக்க விரும்பினால் அது எந்த படமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்குறீர்கள்" என்று கேட்டார். இது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் " ஒரு படம் மட்டும் அல்ல பல படங்கள் உள்ளன. நீங்கள் நிறைய நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார். இந்த பதில் அங்கு கூடி இருந்த அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் மட்டுமின்றி நடிகர் சிம்புவும் நெகிழ்ச்சி அடைந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் "வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டம் பாகம் நிச்சயம் உண்டு என்பதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடிகைகள் ராதிகா,ராஷிகண்ணா,  நடிகர்கள் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். வந்திருந்த ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் படம் ரிலீசாகும் செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், இதனை நான் மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் கேட்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரும் 15-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், சிம்பு வெளியிட்டுள்ள சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு ரசிகர்களையும் குஷிபடுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget