மேலும் அறிய

பாடகியாக அவதாரம் எடுத்துள்ள வேலைக்காரன் சீரியல் நாயகி கோமதி பிரியா: வாழ்த்துக்களைக் குவிக்கும் ரசிகர்கள்..

வேலைக்காரன் சீரியலில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள கோமதி பிரியா, சீரியல் ஆக்டிங் மட்டுமில்லாது, எப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்துவரும் நாயகி கோமதி பிரியா, பாடகியாக புதிவ அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெள்ளித்திரை நாயகிகளைவிட சின்னத்திரை சீரியல் நடிகைகள் தான் மக்கள் மனதில் அதிகளவில் இடம் பிடித்துள்ளனர். ஆம் தினமும் சீரியல்களின் வாயிலாக ஒவ்வொருவரின் வீட்டுத்தொலைக்காட்சிகளும் வலம் வரும் இவர்கள், சீரியல் நடிப்பு மட்டுமில்லாது திரைத்துறையில் பல பணிகளை மேற்கொண்டு ரசிகர்களின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பாடகியாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார் விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் நாயகி நடிகை கோமதி பிரியா.

  • பாடகியாக அவதாரம் எடுத்துள்ள வேலைக்காரன் சீரியல் நாயகி கோமதி பிரியா: வாழ்த்துக்களைக் குவிக்கும் ரசிகர்கள்..

மதுரையைச்சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றில்  மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததன் விளைவு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதோடு மட்டுமின்றி தன்னுடைய நடிப்புத் திறனை வெளிச்சத்திற்கு கொணடுவருவதற்காக ஹைதராபாத் வரை சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த 2018 முதல  2020 வரை கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான ஓவியா என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் வேலைக்காரன் என்ற சீரியலில் தற்போது முதன்மைக் கேரக்டரில் நடித்து வருகிறார். இச்சீரியல் தற்போது தமிழ் மொழியில் எப்படி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோ தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இச்சீரியலில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள கோமதி பிரியா, சீரியல் ஆக்டிங் மட்டுமில்லாது, எப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக மற்ற நடிகைகளைப் போன்று அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவது போல நடிகை கோமதி பிரியாவும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில், நடிகை கோமதி பிரியா, ஒரு ஸ்டுடியோவில் ஒரு பாடல் பதிவு செய்வது போல் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

இதோடு மட்டுமின்றி இந்த பதிவில், யோ நண்பர்களே! நான் இந்த பாடலைப் பாடினேன். புதிய முயற்சி ( உண்மையில் எனக்கு ஏன் இந்த கொலை வெறி) என்று பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை கோமதி பிரியாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு ரசிகர் ஒருவர்,“ நீங்கள் பாடிய பாடலைக் கேட்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் எனவும் ஹார்டி, ஸ்மைலி போன்ற இமோஜிகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமையை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமையை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget