மேலும் அறிய
Advertisement
பீஃப் பிரியாணி சமைத்த வனிதா: ‛நீங்க ஒரு இந்தியரா...?’ இன்ஸ்டாவில் போர்... ஆமாம் போர்!
மலபார் பீஃப் பிரியாணி... வனிதாவை இனி வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது.
வாழ்க்கையில் சர்ச்சை வருவது இயல்பு. வாழ்க்கையே சர்ச்சையானால்... அது தான் வனிதா விஜயகுமார். அவர் எதை செய்தாலும் சர்ச்சையாகும். சில சமயம், அவர் செய்யாதது கூட அவர் பெயரால் சர்ச்சையாகும்.
வனிதா பேசினால் பிரச்சனை, வனிதா வந்தாலே பிரச்சனை என்றெல்லாம் எவர் பற்றி கருத்தி தெரிவிப்பவர்கள் உண்டு. ஆனால், உண்மையில் வனிதா, தன் குடும்பத்தை எதிர்த்து தனி நபராக ஏதாவது சாதிக்க வேண்டும் என போராடும் பெண். நெஞ்சில் பட்டதை நேருக்கு நேர் பேசும் துணிச்சல்காரர். அதனாலேயே அவரை சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.சிலருக்கு பிடிக்கவும் அதுவே காரணமாகவும் இருக்கலாம்.
திடீரென டிவி நிகழ்ச்சியில் வருகிறார், திடீரென கடை திறக்கிறார், திடீரென யூடியூப்பில் ஏதாவது ஒரு கருத்தை பதிவிடுகிறார், சமைக்கிறார், ஷாப்பிங் செய்கிறார். இப்படி எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் வனிதா, அவருக்கே தெரியாமல் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுவார்.
அந்த வரிசையில் தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் அவர் சமைத்து வெளியிட்ட வீடியோ வெளியாவதற்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதற்கு காரணம், இன்று இரவு தனது யூடியூப் சேனலில் ‛மலபார் பீஃப் பிரியாணி’ செய்யப் போகிறேன் என் அவர் இன்ஸ்டாவில் அறிவித்தது தான். இது ஒன்று போதாதா... வனிதா இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு எதிராக பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
நீங்கள் ஒரு இந்துவா? இந்தியாவில் இருந்து பீப் பிரியாணி சாப்பிடலாமா? என்றெல்லாம் வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் வனிதாவுக்கு எதிராக படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
‛நீங்க பீஃப் சாப்பிடுவீங்களா....? என்றெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் பொங்கித் தீர்த்தனர்.
இவர் வீடியோ வெளியிடும் முன்பே, இவ்வளவு எதிர்ப்புகள் என்றால், நேற்று இரவு அவரது வீடியோ வெளியாகிவிட்டது. அப்படியென்றால் பிரச்சனை இனிமே தான் பற்றி எரியும் என நினைக்கிறேன்.
ஆனால் வனிதா இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவர் இல்லை. வீடியோ வெளியிட்ட பின் அவர் பதிலடி தருவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். மலபார் பீஃப் பிரியாணி... வனிதாவை இனி வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது. நாம் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வனிதாவின் பீஃப் பிரியாணி வீடியோ வெளியாகியிருக்கும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion