மேலும் அறிய

Valimai Pongal Release : அடுத்த பொங்கல் ’தல’ பொங்கல்.. வலிமை ரிலீஸ் டேட்டை அறிவித்தார் போனி கபூர்..!

Valimai Release: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வௌியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தமிழ்நாட்டில் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்கள் அவரை செல்லமாக "தல" என்று அழைக்கின்றனர். இவரது நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அதே ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் நடித்து வந்தார்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வந்த இந்த படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின் வெளியீடு எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் இன்று இன்ப அதிர்ச்சியாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.

போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். போனி கபூரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அஜித்குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டாலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் எஞ்சியிருந்த சூழலில், கடந்த மாதம் ரஷ்யாவில் இறுதிகட்ட சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, படத்தின் மோஷன் போஸ்டரும், வலிமை படத்தின் பி.ஜி.எம். மற்றும் வலிமை படத்தின் பாடல் ஒன்றும் வெளியானது. வலிமை படத்தின் புகைப்படங்கள் ஏதும் வெளியாகததாலும், படத்தின் பிற அறிவிப்புகள் ஏதும் கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விரக்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை வெளியீட்டு தேதி அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Valimai Pongal Release : அடுத்த பொங்கல் ’தல’ பொங்கல்.. வலிமை ரிலீஸ் டேட்டை அறிவித்தார் போனி கபூர்..!

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது முதல் டுவிட்டரில் “தல பொங்கல்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. அந்த ஆண்டிலே மாபெரும் வெற்றிப் படமாக விஸ்வாசம் அமைந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அஜித்குமாரின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Valimai update : ’தல’ ஃபேன்ஸுக்கு ஒரு குட் நியூஸ்! வெளியான க்ளூ.. நாளைக்கு ரிலீஸாகிறதா வலிமை டீசர்?

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget