‛முட்டாள்... நீங்க ரியல் ஹீரோ இல்லை திருந்துங்கள்...’ அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்!
‛இது போன்ற முட்டாள்தனமான வேலைகள் உங்கள் ரசிகர்களையும் செய்யத் தூண்டும்... அஜித் அவர்களே இது தவறான செயல். நீங்கள் சினிமாவில் ஹீரோ... ரியல் ஹீரோ அல்ல திருந்துங்கள்!’ -ஆதம் பாவா
![‛முட்டாள்... நீங்க ரியல் ஹீரோ இல்லை திருந்துங்கள்...’ அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்! Valimai Making Video: Anti Indian Producer Adham Bava Criticizing Actor Ajith ‛முட்டாள்... நீங்க ரியல் ஹீரோ இல்லை திருந்துங்கள்...’ அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/52f52adab45ee4dcca10e85ecc9db410_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வலிமை மேக்கிங் வீடியோ(Valimai Making Video) வந்து, பலரின் பாராட்டைப் பெற்றிருக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும், அஜித்(Ajith) செய்த காரியத்தை கண்டித்தத்துடன், சாடியுள்ளார். அவர் வேறு யாருமில்லை.... புளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா.
‛இது போன்ற முட்டாள்தனமான வேலைகள் உங்கள் ரசிகர்களையும் செய்யத் தூண்டும்... அஜித்(Ajith) அவர்களே இது தவறான செயல். நீங்கள் சினிமாவில் ஹீரோ... ரியல் ஹீரோ அல்ல திருந்துங்கள்!’ என்ற அவரது இந்த முதல் பதிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்த, உடனே அதை அழித்துவிட்டு வேறொரு பதிவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதுவும் அஜித்தை நேரடியாக வம்பிழுக்கும் பதிவாக உள்ளது.
இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..? #AjithKumar pic.twitter.com/QaOTTpHTEH
— Adham Bava (@adham_bava) December 15, 2021
இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..?
என அவர் பதிவு செய்துள்ளார். அந்த மேக்கிங் வீடியோவில் நடிகர் அஜித் பைக் சாகச சீன் வருகிறது. அதை வைத்து தான் ஆதம் பாவா, அவரை விமர்சித்துள்ளார். நடிகர் அஜித்தை சீண்டியுள்ள தயாரிப்பாளரின் இந்த வார்த்தைகளுக்கு அஜித் ரசிகர்கள் என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதோ சமீபத்தில் வெளியான வலிமை வீடியோ...
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)