மேலும் அறிய

நான் படமே எடுக்கலைன்னா பாராட்டு விழாவா நடத்தபோறாங்க.. உதயநிதி பதிலடி

திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவின் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் அதிக திரைப்படங்களை வெளியிடுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவின் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் அதிக திரைப்படங்களை வெளியிடுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின்  ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது.

இதனையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் அதிக திரைப்படங்களை வெளியிடுவதாக சொல்கின்றனர். விமர்சனம் செய்வோர் செய்து கொண்டே தான் இருப்பார்கள். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனாவால் திரையரங்குகளில் சரிவர படம் வெளியாகவில்லை. ஏற்கெனவே தயாராக இருந்த படங்களும் கூட திரையரங்குகள் திறக்காததால் வெளியாவதில் தாமதமாகின. அதனால் நான் ஏற்கெனவே தயாரித்த படங்கள் கூட இப்போதுதான் வெளியாகின்றன. இதனால் என் பேனர் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது போல் இருக்கிறது.

இரண்டாவது விஷயம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்றால் நம்பிக்கை இருக்கிறது. எங்களிடம் கணக்கு வழக்கு மிகவும் துல்லியமாக தெளிவாக இருக்கும். எங்கள் அலுவலகம் வந்து பாருங்கள், கணக்கு வழக்குக்காகவே எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் எனப் பாருங்கள். அந்த நம்பிக்கையால் தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை பலரும் அணுகுகின்றனர். அதனால் விமர்சனங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நான் படமே பண்ணாமல் இருந்தால் என்ன என்னை பாராட்டவாப் போகிறார்கள்? 


நான் படமே எடுக்கலைன்னா பாராட்டு விழாவா நடத்தபோறாங்க.. உதயநிதி பதிலடி

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விஷயத்தை செட்பேக் என்று சொல்ல முடியாது. நாங்கள் வேண்டாம் என்றோம். அவர்கள் இது மரபு, அவர்கள் பணத்துக்காக தூக்கவில்லை, விருப்பப்பட்டே செய்கின்றனர் எனக் கூறினார்கள். இந்த ஆண்டு மரபுப்படி நடக்கட்டும் அடுத்தாண்டு முன்னரே பேசி திட்டமிடுவோம் என்று முதல்வர் கூறியுள்ளார். யார் மனதும் புண்படக் கூடாது என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அது.

இன்னோவா காரால் குழப்பம்..

எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் தனது காரில் ஏறப் பார்த்தது குறித்தும் உதயநிதி பேசினார். சட்டசபையில் பெரும்பாலானோர் இன்னோவா கார் தான் வைத்துள்ளனர். அதனாலேயே குழப்பம் வருகிறது. கலைவாணர் அரங்கத்தில் ஒருமுறை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் என் காரில் ஏற முயன்றதாக சொன்னார்கள். அப்புறம் ஜார்ஜ்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் என் காரில் மாறி ஏறப்போனது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நானும் ஒருமுறை மாறி ஏறப்பார்த்தேன். கதவைத் திறந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் படம் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் தவறாக மாறி ஏறப் பார்த்ததை உணர்ந்து இறங்கினேன். சட்டப்பேரவையில் அதுபற்றி கேஷுவலாகப் பேசினேன்” என்று அவர் கூறினார்.


 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget