மேலும் அறிய

Jyothika Controversial Statement : பிரசவம் முடிந்த அடுத்த நாளே..கலங்கிய ஜோதிகா.. தஞ்சை மருத்துவமனை விவகாரத்தில் நடந்தது இதுதான்!

நடிகை ஜோதிகா மருத்துவமனைகளையும், கோவில்களையும் ஒப்பிட்டு ஏன் பேசினார் என்று உடன்பிறப்பே படத்தின் இயக்குனர் இரா.சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். பின்னர், நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், மகளிர் மட்டும், தம்பி என கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமாருடன் இணைந்து உடன்பிறப்பே படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு நடிகை ஜோதிகா கோவில்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் நிலைகள் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Jyothika Controversial Statement : பிரசவம் முடிந்த அடுத்த நாளே..கலங்கிய ஜோதிகா.. தஞ்சை மருத்துவமனை விவகாரத்தில் நடந்தது இதுதான்!

இந்த நிலையில், உடன்பிறப்பே படத்தின் இயக்குனர் இரா.சரவணன் நடிகை ஜோதிகா ஏன் அவ்வாறு பேசினார் என்று வார இதழ் ஒன்றுக்கு பேசியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், உடன்பிறப்பே படப்பிடிப்பிற்காக தஞ்சை சென்ற ஜோதிகா, தஞ்சையில் உள்ள ராஜா மிராசுதாரர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அப்போது கர்ப்பிணி பெண்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் நீண்ட வரிசையில் அங்கே காத்திருப்பதை கண்டார். பிரசவம் முடிந்த அடுத்த நாளே பிறந்த குழந்தையுடன்,  ஒரு பெண் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அரசு மருத்துவமனைகளின் இந்த நிலையைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்த அவர் வெறுமனே பேசுவதுடன் நிறுத்தாமல், மருத்துவமனையில் தேவையான வசதிகளை செய்ய ரூபாய் 25 லட்சத்தை நன்கொடையாக அளித்தார். ஜோதிகாவின் பேச்சு வைரலான பிறகுதான் மருத்துவமனையை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Jyothika Controversial Statement : பிரசவம் முடிந்த அடுத்த நாளே..கலங்கிய ஜோதிகா.. தஞ்சை மருத்துவமனை விவகாரத்தில் நடந்தது இதுதான்!

மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையை சுற்றி கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, புதர் மண்டிக்கிடந்த பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் நேரில் சென்று சீரமைப்பு பணிகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டார். மருத்துவமனையை சுத்தம் செய்தபோது அங்கு 12க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டது. இந்த அனைத்து நல்ல மாற்றங்களும் ஜோதிகாவின் பேச்சால்தான் நடந்துள்ளது.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவின் கணவர் சூர்யா நடிகராக மட்டுமின்றி சமூக ஆர்வலராக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது அகரம் அறக்கட்டளை சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி செலவை ஏற்று படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget