மேலும் அறிய

Trisha | 7 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட சினிமாவில் கால் பதிக்கும் திரிஷா! - த்வித்வா எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு புனித் ராஜ்குமாருடன் ’பவர்’ என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக அறியப்படுபவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போடும் திரிஷா சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமாருடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை திரிஷா ஆன் போர்ட் புகைப்படத்தை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கன்னடத்தில் 'லூசியா', 'யு-டர்ன்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் பவன் குமார் . இவர் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம்தான் 'த்வித்வா'. 'கேஜிஎப்' திரைப்படத்தைத் தயாரிக்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்தான்   'த்வித்வா'. படத்தைத் தயாரிக்கின்றனர். கடந்த ஜூலை 1-ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டர் வெளியானது இது மற்றொரு போஸ்டரின் காப்பி என்ற சர்ச்சையும் கிளம்பியது. ஆனாலும் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடினார்கள்.


Trisha | 7 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட சினிமாவில் கால் பதிக்கும் திரிஷா! - த்வித்வா எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த படத்தில்தான் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கை உள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “  'த்வித்வா' படத்தின் முன்னணி பெண்மணி இதோ!  திறமையான நடிகை திரிஷாவை ஆன் போர்டிற்கு வரவேற்கிறோம்” என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு புனித் ராஜ்குமாருடன் ’பவர்’ என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார். அதன் பிறகு என்னை அறிந்தால் திரைப்படம் டப்பிங் செய்து கன்னடத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கன்னட படத்தில் நேரடியாக திரிஷா களமிறங்கியுள்ளார். இது  அவரது கன்னட ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது உருவாக  உள்ள இந்த புதிய திரைப்படம் உளவியல் சார்ந்த சஸ்பன்ஸ் திரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் , அரசின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாம். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிஷா இது குறித்து தெரிவிக்கயில் “ எனக்கு இந்த படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். திரிஷா தற்போது ராங்கி, சுகர், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ‘குந்தவை’ கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் மோகன் லால் நடிக்கும் ‘ராம்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget