மேலும் அறிய

Watch Video: ‛பல்லாவரம் சந்தையிலே.. நானும் அவரும் முந்தையிலே...’ KPY ராமருடன் ஷாப்பிங் செய்த சாதனா!

‛நானும் டாட்டூ குத்திக்கவா...’ என கேட்கிறார் சாதனா. ‛ம்... குத்திக்க...’ என்கிறார் ராமர். ‛நெஞ்சில் குத்திக்கிறேன்...’ என அனுமதி கேட்கிறார் சாதனா. ‛சரி குத்திக்கோ...’ என்கிறார் ராமர்.

திருச்சி சாதனா ஒரு ப்ரெக்கிங் செய்தியை வெகு லாவகமாக தன் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு, அமைதியாக ஒதுங்கியுள்ளார். அவர் அட்ராசிட்டிகள், அலப்பறைகள், அனுபவங்கள், ஆர்வக்கோளாறுகள் எல்லாம் தரையில் நடந்தாலும், அவை அனைத்தையும் திரையில் கொண்டு வந்து சேர்த்து, தனக்கான பாலோவர்ஸ்களை தக்க வைப்பதில் சாதனாவிற்கு நிகர் சாதனா தான். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ‛அடேங்கப்பா ரகமாக...’ உள்ளது. 

பல்லாவரம் சந்தையில் பர்சஸ் பண்ணும் வீடியோ அது. பல்லாவரத்தில் ஷாப்பிங் போறதெல்லாம் ஒரு வீடியோவா என நீங்கள் கேட்கலாம். உடன் செல்பவர் யார் தெரியுமா... விஜய் டிவி புகழ் கேபிஒய் ராமர். ராமருக்கு சாதனாவுக்கும் என்ன சம்மந்தம்? அவர் ஏன் சாதனா உடல் ஷாப்பிங் செல்கிறார் என்று உங்களுக்கு எழும் அதே குழப்பம் தான் எங்களுக்கும். 


Watch Video: ‛பல்லாவரம் சந்தையிலே.. நானும் அவரும் முந்தையிலே...’ KPY ராமருடன் ஷாப்பிங் செய்த சாதனா!

கலர்புல் புடவையில் சாதனாவும், டீசர்ட் பேண்ட் அணிந்த ராமரும், னோடி போட்டு பல்லாவரம் சந்தையில் வலம் வரும் போது, ‛ஜோடி நல்ல ஜோடி இது.... மாப்பிள்ளை பொண்ணையும் பாரு...’ என்பதைப் போல, அங்கிருந்த கடைக்காரர்கள் எல்லாம் வாயடைத்து பார்க்கிறார்கள். நேராய் முதலில் அவர்கள் சென்றது ஒரு பேன்ஸி பொருட்கள் விற்கும் கடை. 

ஒரு தோடு ஒன்று வாங்கும் சாதனா, அதை ராமர் முன்னிலையில் அங்கேயே அணிகிறார். அதை அருகில் நின்று அப்படியே ரசிக்கிறார் ராமர். அதன் பின் விலை கேட்டு, அங்கிருந்து நகர்கின்றனர். அதன் பின் டாட்டூ குத்தும் கடை ஒன்றுக்கு செல்கின்றனர். அதை பார்த்ததும், ‛நானும் டாட்டூ குத்திக்கவா...’ என கேட்கிறார் சாதனா. ‛ம்... குத்திக்க...’ என்கிறார் ராமர். ‛நெஞ்சில் குத்திக்கிறேன்...’ என அனுமதி கேட்கிறார் சாதனா. ‛சரி குத்திக்கோ...’ என்கிறார் ராமர். ‛யார் பேரை குத்த....’ என கேட்கிறார் சாதனா. ‛உன் புருஷன் பேரை குத்திக்கோ...’ என்கிறார் ராமர்.

‛அவர் பேரை தான் கையில் குத்தியிருக்கேனே...’ என்கிறார் சாதனா. ‛அப்போ... உன் புள்ளைகள் பேரை குத்திக்கோ...’ என்கிறார் ராமர். இப்படியே அவர்கள் இருவரும் ஹாயாக பேசிக்கொண்டு பல்லாவரம் சந்தையில் ஷாப்பிங் செய்கிறார்கள். இறுதியில் ஒரு பகுதிக்குஅவர்கள் சென்றதும், அங்கு நின்ற கேரவேனில் சாதனா ஏறிக்கொள்கிறார். அவர் ஏறிச் செல்வதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் ராமர். அந்த பகுதியின் சூழலை வைத்து பார்க்கும் போது,அது ஒரு சூட்டிங் ஸ்பார்ட் என தெரிகிறது. 

சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே, தனது சூட்டிங்கை தொடங்கி சாதனா ஏதோ வேலையை தொடங்கிவிட்டார். அவருக்கு இது புதிதல்ல. ஆனால் பாவம்... இதில் சிக்கியுள்ளது ராமர் தான். பார்க்கலாம் இந்த வீடியோ ராமரை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை!

அந்த வீடியோவை காண...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget