Watch Video | Writer Trailer | பேனா To துப்பாக்கி.! காக்கி.. காக்கி.! விறுவிறுவென ஓடும் 'ரைட்டர்' ட்ரெய்லர்!
ரைட்டர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது
பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான ரைட்டர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. ஃப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரம் நடித்து இப்படம் உருவாகியுள்ளது. 2003-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுப்ரமணியம் சிவா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
Here is the powerful and super intense trailer of #Writer 🔥
— pa.ranjith (@beemji) December 15, 2021
▶️ https://t.co/kS1pCGuchu#WriterFromDec24
@thondankani @frankjacobbbb @doppratheep @editor_mani @officialneelam @GRfilmssg @PiiyushSingh @thehari___ @abhay_VMC @LRCF6204 @Tisaditi #Jettyproductions
இப்படத்தில் திலீபன், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
A driven policeman. A few months to retire.
— Neelam Productions (@officialneelam) December 15, 2021
Nothing could possibly go wrong.
Could it?
Here is the super intense trailer of #Writer
▶️ https://t.co/btoe3dJOf5@beemji @thondankani @frankjacobbbb @doppratheep @editor_mani @GRfilmssg @PiiyushSingh @abhay_VMC @LRCF6204 pic.twitter.com/e7aJLwk5br
காவல்துறையை சுற்றியும், காவல்துறைக்குள்ளும் நடக்கும் அரசியலையும், உயர்வு, தாழ்வையும் இப்படம் பேசுவதாக தெரிகிறது. காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் சமுத்திரகனி காவல்துறையின் மறுபக்கத்தை காட்டுவதாக தெரிகிறது. விறுவிறு ட்ரைலராக ஓடும் ரைட்டர் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரைட்டர் ட்ரைலர் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், ’’
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்