மேலும் அறிய

Tegimpu: பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளித் தெளிக்கும் தெலுங்கு ஆடியன்ஸ்... தில் ராஜூ கோட்டையை கைப்பற்றியதா துணிவு?

படம் முடித்து வெளியேறும் ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

துணிவு படம் தெலுங்கில் தெகிம்பு எனும் பெயரில் சங்கராந்தி ஸ்பெஷல் ரிலீசாக இன்று வெளியான நிலையில், டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கோலிவுட் பொங்கல் வெளியீட்டுக்கு இணையாக டோலிவுட்டிலும் ஆண்டு தோறும்  சங்கராந்தி ஸ்பெஷல் படங்கள் ரிலீசாவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதவுள்ளன.

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் ரிலீசாக உள்ள நிலையில் கோலிவுட்டைப் போல் டோலிவுட் வட்டாரமும் களைகட்டியுள்ளது.

மற்றொருபுறம் அஜித்தின் துணிவு படம் தெகிம்பு எனும் பெயரிலும், விஜய்யின் வாரிசு படம் வாரசுடு எனும் பெயரிலும் ரிலீஸ் ஆகின்றன.

வாரசுடு படம் தெலுங்கில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு இன்றே வெளியானது.

டோலிவுட்டில் நடிகர் சூர்யா - கார்த்தி, சிம்பு உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே நல்ல மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு தல - தளபதியின் படங்கள் உச்ச நட்சத்திரங்களின் படங்களைக் கடந்து வெற்றிவாகை சூடுமா என எதிர்பார்ப்பு எகிறியது.

இந்நிலையில், துணிவு படம் தெலுங்கில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முடித்து வெளியேறும் ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

சங்கராந்தி ரிலீஸ் வரிசையில் முதல் படமாக வெளியாகியுள்ள துணிவு படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை அள்ளி வரும் நிலையில், வாரசுடு எந்த மாதிரியான விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார் நடித்துள்ள படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கலை முன்னிட்டு இன்றைய தினம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget