மேலும் அறிய

Thotti Jaya Movie : பிளாக் & பிளாக் ட்ரெண்டிங் செட்டர் "தொட்டி ஜெயா" சிம்பு... வெளியாகி 17 ஆண்டுகள்  

Thotti Jaya Movie: காதல் நாயகனாக நடித்த சிம்பு முதல் முறையாக ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இப்படம் முழுவதும் கருப்பு உடையில், நீளமான முடி தாடி வைத்து நடித்தது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது. 

Thotti Jaya Movie released on this day: "வல்லவன்" நயன்தாரா- சிம்பு ஜோடி முதலில் புக்கானது இந்த படத்தில் தான் - 'தொட்டி ஜெயா' வெளியான நாள்  

கலைப்புலி. எஸ். தாணு தயாரிப்பில், வி.இசட். துரை இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் சார்ந்த திரைப்படம் "தொட்டி ஜெயா". 17 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் இப்படம் வெளியாகி திரை ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. இந்த 17 ஆண்டு கொண்டாட்டத்தை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். 

Thotti Jaya Movie : பிளாக் & பிளாக் ட்ரெண்டிங் செட்டர்

சிம்பு தி கேங்ஸ்டர்:

இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த லிட்டில் சூப்பர் ஸ்டார் என குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகராக அறிமுகமாகி தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்றார். சிம்பு நடித்த முதல் கேங்ஸ்டர் திரைப்படம் இது. அதனை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "செக்க சிவந்தது வானம்" திரைப்படத்தில் மீண்டும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். 

ஜீவன் கதாபாத்திரத்தில் நடித்த சிம்பு:  

அஜித் நடிப்பில் வெளியான "முகவரி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வி.இசட். துரை. அது ஒரு பிளாக் பஸ்டர் திரைபடடமாக அமைந்தது. அதற்கு பின்னர் "தொட்டி ஜெயா" திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. முதலில் இப்படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுக்கபட்டவர் நடிகர் ஜீவன். போட்டோஷூட் செய்யப்பட்ட பிறகு அவர் இந்த கதாபாத்திரத்தில் பொருந்தாதலால் நடிகர் சிம்புவை வைத்து படப்பிடிப்பை தொடங்கினர். காதல் நாயகனாக நடித்து வந்த சிம்பு முதல் முறையாக ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் முழுவதும் சிம்பு கருப்பு உடையில், நீளமான முடி தாடி வைத்து நடித்தது அந்த சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது. 

நயன்தாரா மிஸ் ஆயிட்டாங்களே :

தொட்டி ஜெயா படத்திற்கு முதலில் கதாநாயகியாக தேர்ந்ததெடுக்கபட்டவர் நடிகை நயன்தாரா. ஆனால் அவரின் பிஸியாக ஷெட்யூல் காரணமாக அவரால் நடிக்க முடியாததால் சேரனின் இயக்கத்தில் வெளியான "ஆட்டோகிராப்" படத்தில் சிறப்பாக நடித்த கோபிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். நயன்தாரா - சிம்பு ஜோடி "தொட்டி ஜெயா" படத்தில் நடித்திருந்தால் "வல்லவன்" திரைப்படத்திற்கு முன்னர் இவர்களின் ஜோடியில் வெளியான படமாக இது அமைந்து இருக்கும்.    

ஹாரிஸ் ஜெயராஜ் - சிம்பு ஜோடி :

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "தொட்டி  ஜெயா" 
படத்தின் பாடல்கள் இனிமை. மேலும் கோயில் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இப்படத்தின் மூலம் இணைந்தார்கள் ஆனால் அதற்கு பிறகு சிம்பு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Embed widget