மேலும் அறிய

Dec 01 Movies: காத்திருக்கும் கடைசி மாதம்.. டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் தமிழ் படங்கள் இதோ..!

இந்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் சினிமாக்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் உள்ள சினிமா ‘வுட்’களில் அதிக பணம் புழங்குவதில் தமிழ் சினிமாவும் ஒன்று. இப்படியான தமிழ் சினிமாவில் வாரவாரம் சினிமாக்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரத்தில் அதாவது நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் நேரடித் தமிழ் சினிமாக்கள் என்ற வரிசையில் மொத்தம் 4 சினிமாக்கள் வெளியாகவுள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்றால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள பார்க்கிங் திரைப்படம். இதையடுத்து வெளியாகவுள்ள இரண்டு படங்களில் ஒன்று பிக் பாஸ் புகழ் பாலா நடிப்பில் உருவாகியுள்ள வா வரலாம் வா படமும், அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள சூரகன் என மொத்தம் 4 திரைப்படங்கள் வெளியாகின்றது. 

நயன்தாராவின் அன்னபூரணி

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அன்னபூரணி நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள 75வது படமாகும். இயக்குநர் அட்லியின் ராஜா ராணி படத்தில் நயந்தாராவுக்கு ஜோடியாக நடித்த ஜெய்யுடன்  மீண்டும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமையற்காரராக ஆசைப்படும் ஒரு வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையைச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்

நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடித்து வரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான பார்க்கிங் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் தயாரிப்பில் உருவாகியுள்ள , பார்க்கிங் ஒரு திரில்லர் படம்  என்று கூறப்படுகிறது. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

பாலாவின் வா வரலாம் வா 

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 மூலம் புகழ் பெற்ற பாலாஜி முருகதாஸ்.  வா வரலாம் வா படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். எல்ஜி ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சவரணன் சுப்பையா மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பாலாஜி ஒரு சூப்பர் மாடலாக இருந்தார், அவர் ரூபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா 2018 என்ற பட்டத்தை வென்றிருந்தார். 

 

கார்த்திகேயனின் சூரகன் 

தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் சூரகன் சதீஷ் கீதா குமார் இயக்கி உள்ளார் சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன, ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஸ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தரமா விக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget