Watch Video | ஷூட்டிங் கேப்ல ஒரு குத்து டான்ஸ்..! சீரியல் நாயகிகளின் அசத்தல் ஸ்டெப்ஸ்!!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நட்சத்திரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் நட்சத்திரா. அதனைத்தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் அசத்தியவர் நட்சத்திரா. இதை தொடர்ந்து இவருக்கு சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நாயகி, வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுயிருக்கும் ரீல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலை சார்ந்த நடிகைகளுடன் இணைந்து நட்சத்திரா நடனமாடுகிறார். இந்த வீடியோவை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram