மேலும் அறிய

The GOAT: 'தி கோட்' பிரஸ் மீட் இன்றும் நடக்கவில்லை' - வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைப்பு

The GOAT: நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படத்தின் பிரஸ் மீட் இன்று நடைபெற இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ் என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

The GOAT: 'தி கோட்' பிரஸ் மீட் இன்றும் நடக்கவில்லை' - வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைப்பு

சமீபத்தில் வெளியான 'தி கோட்' படத்தின் டிரைலர் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது 50 மில்லியன் வியூஸ் கடந்தது. அதிலும் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் இளம் வயது காட்சிகள் ரசிகர்களுக்கு விசுவல் ட்ரீட்டாக இருந்தது. இப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்  படக்குழுவினர். அந்த வகையில் 'தி கோட்' படக்குழுவினர் கலந்து கொள்ளும் பிரஸ் மீட் ஒன்று ஆகஸ்ட் 29ம் தேதியான இன்று நடைபெறும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் தற்போது அந்த பிரஸ் மீட் இன்று நடைபெறவில்லை என்றும் வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிக பெரிய ஏமாற்றமாக அமைந்தது.   

இந்நிலையில் படத்திற்கு ஏற்கனவே தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் மாற்றப்பட்ட திரையிடல் நேரத்துக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேர 58 நிமிடங்கள் நீளம் கொண்டது என கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில காட்சிகள் சேர்க்கப்பட்டு தற்போது 3 மணி நேர 3 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் 'தி கோட்' படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget