மேலும் அறிய

”இயக்குநர் அவதாரம் இயற்கையானது “ - விஜய் ஆண்டனியின் தன்னம்பிக்கை முடிவு..!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தானே படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கிய விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு பாடகர்,எடிட்டர்,  நடிகர் என தனது அவதாரங்களை மாற்றிக்கொண்டே வந்தவர் , தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’ . இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த பாகத்தை எடுக்கவும் விஜய் ஆண்டனி திட்டமிட்டிருந்தார். இதற்காக பல இயக்குநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பிச்சைக்காரன் முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் சசியையும் அணுகியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதன் பிறகு ‘பாரம்’ என்ற விருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமியை கமிட் செய்து அதற்கான அறிவிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்டனர். அதன் பிறகு சில காரணங்களால் அவரை நீக்கிவிட்டு ஆனந்த கிருஷ்ணன் என்ற இயக்குநரை ஒப்பந்தம் செய்தனர்.

”இயக்குநர் அவதாரம் இயற்கையானது “ - விஜய் ஆண்டனியின் தன்னம்பிக்கை முடிவு..!
ஆனந்த கிருஷ்ணன் தான் இயக்க போகிறார் என காத்திருந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தானே படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். பிச்சைக்காரன் படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை விஜய் ஆண்டனியே எழுதியிருக்கும் நிலையில், அந்த படத்தின் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் கூறும்பொழுது “என்னிடம் மக்கள் பலமுறை கேட்டிருக்காங்க, நீங்க எப்போ இயக்குநராக மாற போறீங்கன்னு, ஆனால் நான் அவர்களிடன் “இல்லை” என்றேதான் பதிலளித்திருக்கிறேன். யாரோ சமைத்த உணவே சுவையாக இருக்கும்பொழுது, நான் ஏன் சமையல்காரனாக மாற வேண்டும். இந்த இயக்குநர் அவதாரம் இயற்கையானது, நான் திட்டமிடவில்லை” என தெரிவித்துள்ளார்.

”இயக்குநர் அவதாரம் இயற்கையானது “ - விஜய் ஆண்டனியின் தன்னம்பிக்கை முடிவு..!
முன்னதாக சில படங்களில் தான் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருப்பதால் , தனக்கு பிச்சைக்காரன் 2 படத்தை சிறந்த படமாக எடுக்க   முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கிறார். பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் , ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக உருவாக உள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. துபாய், சென்னை, ஜார்ஜியா, கல்கத்தா உள்ளிட்ட  பல இடங்களில்  படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .இந்த படத்தின் வேலைகளை விரைவில் முடித்துக்கொடுத்துவிட்டு முழு மூச்சில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளாராம் .விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் முதல் பாகம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget