மேலும் அறிய

BEAST | பீஸ்ட் படத்தில் இந்த மொழி பாட்டா? ! - யாரு பாடப்போறாங்க தெரியுமா?

முன்னதாக மாஸ்டர் படத்தில் ’மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற அறிமுக பாடலில் புதிய ஸ்லாங் ஒன்றினை அறிமுகப்படுத்தியிருந்தார் அனிருத்.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் , நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’. இந்த படத்தின் மூன்றாவது ஷெடியூல் ஷூட்டிங் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிக்கிறது பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம்.  படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே படமாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் ‘அரபு ‘ மொழியில் ஒரு பாடல் இடம்பெற உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடலை அனிருத்தே பாடல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றிருந்த பின்னணி இசையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச்செய்துள்ளது. முன்னதாக மாஸ்டர் படத்தில் ’மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற அறிமுக பாடலில் புதிய ஸ்லாங் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார் அனிருத்.


BEAST | பீஸ்ட் படத்தில் இந்த மொழி பாட்டா? ! - யாரு பாடப்போறாங்க தெரியுமா?
பீஸ்ட் படத்தில் செல்வராகவன் , யோகி பாபு, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ,லில்லிபுட் ஃபாரூக்கி,விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தவிர  சார்பட்டா படத்தின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லக்கல் தற்போது மூன்றாவது வில்லனாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.

ஏற்கனவே, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ள பீஸ்ட் படக்குழுவில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர்  இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் ,கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ,  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதிகளில் நடைப்பெற்றது தவிர மால் ஒன்றில் செட் அமைத்து படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் மற்றும்  சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானதை பார்த்தோம். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஒரு ரகசிய ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி, அவரே பாட உள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.  


BEAST | பீஸ்ட் படத்தில் இந்த மொழி பாட்டா? ! - யாரு பாடப்போறாங்க தெரியுமா?

பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்றபோது, கொரோனா இரண்டாவது அலையால் படக்குழு மீண்டும் நாடு திரும்பியது. மேலும், படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்க பீஸ்ட் படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம். அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரடெக்ஸன் வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட உள்ளனர். அதே நேரம் புரமோஷன் வேலைகளில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிரைலரில் இடம்பெறும் என தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget