மேலும் அறிய

Valimai Update: ஐரோப்பா செல்லும் அஜித்.. ஆகஸ்ட் வெளியீட்டுக்காக பரபரக்கும் படக்குழு!

வலிமை படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

'வலிமை' திரைப்படம் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில் இந்த மாதமே நடிகர் அஜித் மற்றும் படக்குழு ஐரோப்பா பறக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே ஆண்டில் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வலிமை அப்டேட் பற்றி ரசிகர்கள் மத்தியில் அன்றாடம் எதிர்பார்ப்பு எகிறியது, இதன் வெளிப்பாடாக விளையாட்டு மைதானங்களில் கூட வலிமை அப்டேட் என்ற போஸ்டர்களுடன் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க, படக்குழு அண்மையில் மோஷன் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Valimai Update: ஐரோப்பா செல்லும் அஜித்.. ஆகஸ்ட் வெளியீட்டுக்காக பரபரக்கும் படக்குழு!

வலிமை படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.இதற்காக இந்த மாதமே படக்குழு கிழக்கு ஐரோப்பியாவுக்கு செல்லவிருக்கிறது. அஜித்தின் சில காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வலிமை படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. அன்றாடம் ஏதேனும் தகவல் படம் குறித்து வெளியாவதால் அஜித் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வலிமையை வலிமையோடு ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

வலிமை அப்டேட் என்றாலே சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது அல்லவா. அப்படித்தான் அண்மையில், வலிமை மோஷன் போஸ்ட வெளியானது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது" என்று லைட்டர் வெயின் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

Valimai Update: ஐரோப்பா செல்லும் அஜித்.. ஆகஸ்ட் வெளியீட்டுக்காக பரபரக்கும் படக்குழு!

'வலிமை' திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் ஜோடி சேரும் ஹூமா குரேஷி பாலிவுட் பட்சி. வில்லனாக களமிறங்கும் கார்த்திகேயா கும்மகொண்டா தெலுங்கு நடிகர்.

படத்தை போனி கபூர் படத்தைத் தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைவதற்குள் 'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் உரிமை விற்கப்பட்டுவிட்டது வலிமையின் இன்னொரு பெருமித அடையாளம். 

வலிமை படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை, ராகுலின் ரோமியோ பிக்சர்ஸும், அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸும் பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget