மேலும் அறிய

TEST Movie: ஷூட்டிங்கை முடித்த நயன், மாதவன், சித்தார்த்: சம்மருக்கு வெளிவரும் டெஸ்ட் திரைப்படம்!

நயன்தாரா சித்தார்த் மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஹிட் கொடுத்த கதைக்களம் என்றால் அது கிரிக்கெட். கிரிக்கெட்டை மையக்கதையாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஒரு அரசியல் கருத்தினை பேசும் படமாக இருந்தாலும், படத்தின் முக்கிய அங்கமாக இருப்பது கிரிக்கெட். இப்படியான நிலையில் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து டெஸ்ட் திரைப்படம் உருவாகி வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெள்ளித்திரையில் மீண்டும் கால்பதிக்கவுள்ள மீரா ஜாஸ்மின் என படத்தில் நடிக்கும் நடிகர்களுக்காகவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, படத்தின் மையக் கதை கிரிக்கெட்டை வைத்து என்பதால், படத்தின் மீதான ஆர்வம் எகிறியுள்ளது. இந்நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்தது என படக்குழு தெரிவித்துள்ளது. 

Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த டெஸ்ட் படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

 மாதவன், சித்தார்த், நடிகை நயன்தாரா ஆகிய 3 பேரும் ஒன்றாக இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற இந்தி படம் ஆகியவற்றுக்குப் பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இருவரும் நடிக்கும் 3வது படமாக இப்படம் அமைந்துள்ளது.  மேலும் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான டெஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டரில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் யாரோ ஒருவர் பந்தை அடிப்பது போன்றும், ரசிகர்களின் ஆரவார சத்தங்களும் இருப்பது போன்ற பிண்ணனியில் மாதவன் , நயன்தாரா , சித்தார்த் ஆகியோரின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான “தமிழ் படம்” மூலம் தமிழ் சினிமாவில் YNOT ஸ்டுடியோ நிறுவனம் கால் பதித்தது. தொடர்ந்து வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத் தலைவன், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம் 2 , கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், கடசீல பிரியாணி, தலைக்கூத்தல் ஆகிய பல படங்களை தயாரித்தது. மேலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை விநியோகிப்பதிலும்  இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
14 ஆண்டுகால காதல்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்! மணமகன் யார் தெரியுமா?
14 ஆண்டுகால காதல்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்! மணமகன் யார் தெரியுமா?
அண்ணாமலை ரீமேக் செய்யக்கூடாது...சிவகார்த்திகேயனை கண்டித்த ரஜினி மக்கள் தொடர்பாளர் பதிவு நீக்கம்
அண்ணாமலை ரீமேக் செய்யக்கூடாது...சிவகார்த்திகேயனை கண்டித்த ரஜினி மக்கள் தொடர்பாளர் பதிவு நீக்கம்
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Embed widget