Amudhavum Annalakshmiyum: செந்திலுக்காக சிதம்பரத்திடம் சவால் விட்ட அமுதா... இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்திலுக்காக அமுதா சிதம்பரத்திடம் சவால் விடும் காட்சிகள் இடம் பெறுகிறது.
இதுவரை நடந்தது என்ன?
அப்பத்தா அமுதாவுக்கு மொத்த சொத்தையும் எழுதி வைக்க போவதாக இளங்கோவனை ஏற்றிவிடுகிறார். இதனால் நாகுவை இளங்கோ அடிக்கிறான். மறுநாள் காலையில் அமுதாவுக்கு சின்னா,பரமு ராஜமரியாதை கிடைக்கிறது. சின்னா அமுதாவிடம், என்ன இருந்தாலும் நீ கோடீஸ்வரி, உன்னை பத்தி நாங்க எதுவும் தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கோம்மா என பவ்யமாக பேசுகிறான். இதனை மாணிக்கம் நக்கலடிக்கிறார். இதனையடுத்து வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அமுதாவின் தம்பி செல்வா வீட்டிற்கு வருகிறான்.
தொடர்ந்து சொத்து பிரிப்பது தொடர்பாக நாச்சியார் அமுதாவையும் செந்திலையும் வரச் சொல்கிறார். இருவரும் சிதம்பரம் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அப்பத்தா குடும்ப வழக்கப்படி சொத்து மூத்த பொண்ணுக்கு தான் போய் சேரும். நம்ம வீட்டோட மூத்த பொண்ணு அமுதாவுக்கு சொத்தை எல்லாம் எழுதி வைக்க போறேன். இதுல யாருக்காவது ஆட்சேபனை இருக்கா என கேட்கும் காட்சிகள் இடம் பெற்றது.
இன்றைய எபிசோட் அப்டேட்
அப்பத்தா சிதம்பரத்திடம் நீ என்ன நினைக்கிறியோ அதை சொல்லு என கூறுகிறார். சிதம்பரம் என்னை பொறுத்த வரைக்கு உமா தான் என் பொண்ணு. அவ என் பொண்ணு இல்ல.. நீங்க அமுதாவுக்கு தான் குடுக்கணும்னு ஆசைப்பட்டா அதை நான் தடுக்க மாட்டேன் என சொல்கிறான். உடனே அப்பத்தா டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு விட்டு இந்த சொத்து எல்லாம் அமுதாவுக்கு தான். அவ தான் கூடப் பிறந்தவங்களுக்கு எவ்வளவு குடுக்கனுங்குறதை முடிவு பண்ணுவா என சொல்கிறார்.
இதனையடுத்து அமுதா அப்பத்தாவிடம் எனக்கு சொத்து எல்லாம் வேண்டாம். அப்புச்சி என்னை மகளா ஏத்துகிட்டா போதும். அப்புச்சியோட உறவு வேணும் என சொல்ல சிதம்பரம் அது முடிஞ்சு போச்சு. என்னால மீண்டும் அந்த உறவை ஏத்துக்க முடியாது என சொல்கிறார். இதனால் கோபமடையும் அமுதா சிதம்பரத்திடம்ம் என் புருஷன் சொன்ன பொய் தான் என்னை ஏத்துக்க மறுக்குதுன்னா அவங்க சொன்ன பொய்யை நான் நிஜமாக்கி காட்டுறேன் என சவால் விடுகிறாள்.
அதன் பிறகு அன்னலட்சுமி மாணிக்கத்திடம் என் மருமகள் செந்திலை நம்பி சவால் விட்டுட்டு வந்துட்டா. இவன் வேலைக்கே ஆக மாட்டான். என்னையவே இத்தனை வருஷமா ஏமாத்திருக்கான். என் மருமகள் பாவம் இவனை நம்பி இன்னும் என்னெல்லாம் கஷ்டப்படப் போறாளோ என செந்திலை திட்டுகிறாள்.
பிறகு மாணிக்கம் அன்னத்தின் கையை பிடித்து வேகமாக செந்தில் படிக்கும் காலேஜுக்கு அழைத்து வருகிறான்.அன்னலட்சுமி புரியாமல் பார்க்க, மாணிக்கம் காலேஜில் செந்தில் படித்துக் கொண்டிருப்பதை காட்டுகிறான். மாணிக்கம் அவளிடம் செந்திலை படிக்க வைப்பதே அமுதா தான் என சொல்ல அன்னலட்சுமி நெகிழ்ச்சி அடைகிறாள்.