Parijatham Serial: வர்ஷினியை காப்பாற்றிய இசை.. புடவை எடுக்கப்போன இடத்தில் நடந்தது என்ன?
Parijatham: பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

Parijatham: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கல்யாணத்திற்கு புடவை வாங்க ஜவுளி கடைக்கு செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வர்ஷினியை காப்பாற்றும் இசை:
அதாவது, ஜவுளி கடையில் விஷால் டல்லாக இருக்க ராகவ் வர்ஷினிக்கு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறான். இன்னொரு பக்கம் சிந்தாமணி மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் ஒன்று சேர்ந்து இரண்டு மூன்று புடவைகளை எடுத்து விஷாலிடம் கொடுத்து இதில் ஒற்றை தேர்வு செய் என சொல்ல விஷால் ஒரு புடவையை செலக்ட் செய்து கொடுக்கிறான்.
வேலைக்கு போன இசை இதே கடைக்கு துணி வாங்க வர வேண்டிய சூழல் உருவாக கடைக்கு வந்த போது ஸ்ரீஜா, சிந்தாமணி பேசுவது தெரிய வர கோபம் கொள்கிறாள். வர்ஷினியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
அடுத்ததாக ஸ்ரீஜாவின் தோழியை சந்தித்து இசை உண்மையை சொல்ல சொல்லி மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















