Karthigai Deepam: விவகாரத்து பேப்பரில் கையெழுத்திட்ட ரேவதி.. நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட ரேவதி:
அதாவது ரேவதி கையெழுத்து போட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரோகிணி, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் ஆகியோர் ரேவதியை சந்தித்து கேட்க என் புருஷன் எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கு அதனாலதான் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறாள்.
சந்திரகலா காளியம்மாவிடம் விஷயத்தை சொல்ல, கார்த்திக் திட்டம் போட்டு தான் இப்படி பண்றான். உஷாராக இருக்கணும் என்று சொல்கிறாள். பிறகு ராஜராஜன் ஆகியோர் கார்த்தியை சந்தித்து பேச அதுக்கு ஒரு காரணம் இருக்கு, பொறுமையா இருங்க உங்களுக்கே புரியும் என்று சொல்கிறான்.
நீதிமன்ற தீர்ப்பு என்ன?
அதை தொடர்ந்து அடுத்த நாள் நீதிமன்றம் கூடுகிறது. கார்த்திக், ரேவதி இருவரும் ஒருமனதாக கையெழுத்து போட்டிருப்பதால் எளிதாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று சொல்கிறார். பிறகு விசாரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
நீதிபதி ரேவதியிடம் விருப்பப்பட்டு தான் இந்த முடிவெடுத்தீங்களா? என்று கேட்க, சாமுண்டீஸ்வரி ஆமாம் என்று சொல்ல நீதிபதி நீங்க எதுக்கு பதில் சொல்றீங்க? உங்க பொண்ணு சொல்லட்டும் என அடக்குகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? காத்துகிட்டு தேவதை கொடுக்க போகும் பதில் என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியல் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















