வாசலிலே காத்திருக்கம் சாமுண்டீஸ்வரி! கலசத்துடன் வருவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் சேட்டுவின் குழந்தையை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்ய, சேட்டுவின் மனைவி போன் செய்து கலசத்தை கொண்டு வாங்க, அதனால் தான் எல்லா பிரச்னையும் என்று சொல்ல சேட்டு திரும்ப கேட்க அவர்கள் கொடுக்க முடியாது என சொல்லி விடுகின்றனர்.
கார்த்திக்கிற்காக காத்திருக்கம் சாமுண்டீஸ்வரி:
சேட்டுவின் மனைவி கலசம் குறித்து பேசுவதை கேட்ட கார்த்திக் என்ன கலசம் என்று விசாரிக்க அந்த பெண்மணி நடந்தது அனைத்தையும் சொல்கிறாள். பிறகு சேட்டுவும் அங்கு வந்து விட கலசத்தை மீண்டும் வாங்குவதற்காக குடோனுக்கு வருகின்றனர்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக்காக காத்திருக்க சந்திரகலா அந்த ட்ரைவர் எல்லாம் திரும்ப வர மாட்டான்.. அவன் தான் இதை திட்டம் போட்டு செய்தது என சொல்ல மயில்வாகனம் உள்ளிட்டோர் கார்த்திக் வந்து விடுவான் என பேசுகின்றனர்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
இங்கே குடோனுக்கு வந்து கலசத்தை கேட்க அந்த வெளிநாட்டு நபர் கொடுக்க முடியாது என சொல்ல கார்த்திக் போலீசை கூப்பிடுவேன் என மிரட்டி வாங்கி வருகிறான். இங்கே கலசத்தை கொண்டு செல்வதற்காக ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.