Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு காப்பு கட்ட ராஜ ராஜன் வரவேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
விஷத்தை குடித்த சாமுண்டீஸ்வரி:
அதாவது ராஜராஜன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக காப்பு கட்டுவதற்கு கிளம்ப சந்திரகலாவின் சதியால் சாமுண்டீஸ்வரி அவரை தடுக்கிறார்.
ராஜராஜனை எங்க போறீங்க என்று கேட்க கோவிலுக்கு காப்பு கட்டுவதற்காக செல்வதாக சொல்ல நீங்க போகக்கூடாது என சாமுண்டீஸ்வரி தடுக்கிறார். நாளும் ராஜராஜன் தனது முடிவில் உறுதியாக இருக்க சாமுண்டீஸ்வரி நீங்க போனா விஷத்தை கொடுத்து விடுவேன் என விஷத்தை குடிக்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஏமாந்து போன ராஜராஜன்:
நீங்க காப்பு கட்ட போக மாட்டேன்னு சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுத்து பின் என சாமுண்டீஸ்வரி சொல்ல ராஜராஜன் நான் போகவில்லை என வாக்கு கொடுக்கிறார். பிறகு டாக்டர் வந்து சாமுண்டீஸ்வரி பரிசோதிக்க அவர் நலமாக தான் இருக்கிறார். விஷம் குடித்தது போல நடித்து இராஜராஜனை ஏமாற்றியது தெரிய வருகிறது.
இதையடுத்து மயில்வாகனம் இந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் இதற்கெல்லாம் காரணம் சந்திரகலாவாக தான் இருக்கும் என சொல்கிறான். அதன் பிறகு இரண்டு தரப்பினரும் பஞ்சாயத்துக்கு கிளம்பி வருகின்றனர்.
அடுத்து நடப்பது என்ன?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















