மேலும் அறிய

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘கார்த்திகை தீபம்’ தொடரில், இந்த வாரம் சதீஷின் ஆள்மாறாட்டத்தைச் சுற்றி பல திருப்பங்கள் நடக்கின்றன. 

உண்மையான சதீஷ் கடத்தப்பட, அவரைப் போல வேஷம் போட்டிருக்கும் மகேஷ் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சதீஷின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரும் கார்த்திக், உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

கடத்தப்பட்ட உண்மையான சதீஷ்:

முதலில், உண்மையான சதீஷின் காதலி கார்த்திக்கிற்கு போன் செய்து உதவி கேட்கிறார். சதீஷ் தங்களுடைய காதல் விஷயத்தை வீட்டில் சொல்லத் தயங்குவதாகவும், இந்த விஷயத்தில் கார்த்திக் தான் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் சொல்கிறார். கார்த்திக்கும் அவருக்கு ஆறுதல் சொல்லி, எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். ஆனால், இதற்கிடையில் சிவனாண்டியின் ஆட்கள் உண்மையான சதீஷைக் கடத்திச் சென்றுவிடுகின்றனர்.

மறுபக்கம், மகேஷ் புதிய கெட்டப்பில் சதீஷ் போலவே வேஷம் போட்டு, மாயாவுடன் பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கே சுவாதியைப் பெண் பார்க்கும் சடங்குகள் எல்லாம் முறைப்படி நடக்கின்றன. வந்திருப்பது உண்மையான சதீஷ் இல்லை என்பது தெரியாமல், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றனர்.

கார்த்திக்கிற்கு சந்தேகம்:

இதற்கிடையில், கேரளாவில் இருக்கும் கார்த்திக்கிற்கு இந்த விஷயங்கள் தெரிய வருகின்றன. சதீஷின் அக்கா லண்டனிலிருந்து இப்போதுதான் வர வேண்டும். ஆனால், அவர் ஏற்கனவே வந்துவிட்டதாகச் சதீஷ் சொல்வதை நினைத்துப் பார்க்கும் கார்த்திக்கிற்குப் பெரிய சந்தேகம் வருகிறது. வந்திருப்பது உண்மையான சதீஷ் இல்லை என்று நினைக்கும் அவர், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார்.

இந்த நேரத்தில், சுவாதி போலி சதீஷான மகேஷை ஒரு விடுதியில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது திடீரென்று கார்த்திக் அங்கே வருவதைப் பார்த்த மகேஷ் பயந்துபோகிறார். உடனே தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். பிறகு அங்கே வரும் கார்த்திக், சதீஷைப் பற்றி சுவாதியிடம் விசாரிக்கிறார். அவரும் சற்று முன்புவரை சதீஷ் அங்குதான் இருந்ததாகச் சொல்கிறார்.

மாயா ஷாக்:

இதனால் இன்னும் சந்தேகமடையும் கார்த்திக், மயில்வாகனத்தை அழைத்துக்கொண்டு நேராக வீட்டிற்குச் செல்கிறார். இருவரும் வீட்டின் காலிங் பெல்லை அடிக்கின்றனர். உள்ளே இருக்கும் மாயா, வாசலில் கார்த்திக் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

இப்போது கார்த்திக் வீட்டிற்குள் வந்தால் மகேஷின் உண்மையான முகம் தெரிந்துவிடுமா? உண்மையான சதீஷ் எங்கே இருக்கிறார்? கார்த்திக்கின் கேள்விகளுக்கு மாயா என்ன பதில் சொல்லப் போகிறார்? இந்தப் பரபரப்பான திருப்பங்களுடன் ‘கார்த்திகை தீபம்’ தொடரின் சனிக்கிழமை எபிசோடு விறுவிறுப்பாக நகர்கிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
பழியைச் சுமந்த சாமுண்டீஸ்வரி.. தூக்கில் தொங்கிய யோகி! சதி செய்யும் சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Embed widget