Karthigai Deepam: சிவனாண்டி வைத்த நாட்டு வெடிகுண்டு.. தப்புமா கார்த்திக் உயிர்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியிடம் காதலை சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரிக்கு தீீபாவளி பரிசு:
அதாவது, சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக் ரேவதியிடம் மோதிரத்தை கொடுத்து மாற்றி கொள்ள சொல்கின்றனர். மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் இருந்து நவீன், துர்கா வெளியில் கிளம்ப தீபாவதி எங்க போறாங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரி கையால் துணி வாங்க போவதாக சொல்கிறார்.
அது எப்படி முடியும் என்று தீபாவதி கேட்க என் பேரன் ராஜா அங்க இருக்கான், அவன் நினைச்சா எல்லாம் முடியும். அவன் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவான் என்று சொல்கிறாள். அடுத்ததாக கோவிலில் சாமுண்டீஸ்வரி எல்லாருக்கும் தீபாவளி பரிசாக துணியையும் பணத்தையும் கொடுக்கிறார்.
நாட்டு வெடிகுண்டை வெடிக்கப்போகும் கார்த்திக்:
வரிசையில் நவீன் மற்றும் துர்காவும் நிற்க இவர்களை பார்த்த சாமுண்டீஸ்வரி கோவம் கொண்டாலும் எல்லாருக்கும் கொடுப்பது போல் துணியையும் பணத்தையும் கொடுக்கிறாள். இதனால் நவீன், துர்கா சந்தோசப்படுகின்றனர்.
அடுத்து சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு வெடி வெடிக்க செல்கின்றனர். கார்த்திக் சிவனாண்டி வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்த நாட்டு வெடிகுண்டை பட்டாசு என நினைத்து கொளுத்த செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















