Anna Serial: உண்மையை உளறிய தங்கைகள் .. பாண்டியம்மாபோட்ட திட்டம் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் அண்ணா சீரியல்!
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மணப்பெண் மண்டபத்திற்கு வரும்போது பேனர் கீழே சரிந்து விழுந்த நிலையில் அபச குணம் என்று தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது என்ன இப்படி நடக்குது பொண்ணு ராசி இல்லாதவளோ என எல்லோரும் பேச தொடங்க உன்னோட தாய் மாமாவும் இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தெரியலையே என்று சந்தேகத்துடன் பேச கவிதாவின் அக்கா என் மாமா கொஞ்ச நேரம் சும்மா இரு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே எல்லாம் எடுத்து போட்டு செய்யறாங்க இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் என சொல்கிறாள்.
அதன் பிறகு மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க தான் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்று சொல்ல சண்முகம் குடும்பத்தினர் வந்து நிற்கின்றனர். முத்துப்பாண்டி எப்படியும் ரத்னாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் எதுக்குப்பா இதெல்லாம் என்று கேட்க அடேட் முட்டாப் பயலே இதெல்லாம் வழக்கம், அதையெல்லாம் சரியாக செய்தால் தான் சந்தேகம் வராது என திட்டுகிறார்.
ஸ்கூலில் ரத்னா தூத்துக்குடி கிளம்ப தயாராக இருக்க அந்த வழியாக வரும் பாண்டியம்மா சண்முகத்தின் தங்கைகள் மூலமாக தூத்துக்குடி செல்லும் விஷயத்தை கேள்விப்படுகிறாள். இதனால் அதிர்ச்சியடையும் பாண்டியம்மா ரத்னா இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காதே என பதறி ஓடி வருகிறான்.
முத்துப்பாண்டி மற்றும் சுந்தரபாண்டியிடம் ரத்னா ஊருக்கு போகும் போது சொல்ல முத்துப்பாண்டி இதுக்கு தான் எனக்கு வந்து ஆல் த பெஸ்ட் சொன்னாளா என்று ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்கிறான். உடனே பாண்டியம்மா ரத்னாவை இங்கேயே தடுத்து நிறுத்த தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? முத்துப்பாண்டி கல்யாணத்தில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Ethirneechal: தொடரும் ட்விஸ்ட்.. தர்ஷினியின் நிலை என்ன? - இன்றைய எதிர்நீச்சலில் சீரியல் அப்டேட் இதோ!
Siragadikka Aasai: ப்ரௌன் மணி சூழ்ச்சியால் சிக்கலில் முத்து..சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!