Siragadikka Aasai : ரோகிணியை தேடிச்சென்ற இடத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை எபிசோட் அப்டேட்
Serial Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
Serial Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் வித்யா காபி போட்டு எடுத்து வந்து ரோகிணியை தேடுகிறார். ரோகிணி வீட்டில் இல்லாததால், வித்யா மனோஜுக்கு கால் செய்து பேசுகிறார்.இங்கு வரவில்லை என்று மனோஜ் கூறுகிறார். இப்போ ரோகினி எங்கே என்றும் கேட்கிறார். அதற்கு ”உங்கள நம்பி வந்தா பாருங்க அவளை சொல்லனும் வைங்க போனை" என்று கூறி வித்யா போன் இணைப்பை துண்டிக்கிறார்.
மனோஜ் இதை தன் அம்மாவிடம் சொன்னதும், விஜயா ”என் மருமக இப்போ எங்கே?” என கேட்கிறார். அதற்கு மனோஜ், முத்துவை பார்த்து எல்லாத்துக்கும் இவன் தான் மா காரணம் என கூறுகிறார். பின் முத்துவும் மனோஜூம் சட்டையை பிடித்து சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். பின் அண்ணாமலை அவர்களை தடுத்து விடுகிறார்.
ஸ்ருதி, விஜயா, ரவி என அனைவரும் முத்துவை திட்டுகின்றனர். உடனே விஜயா, ”உன்னாலையும் உன் பொண்டாட்டியாலையும் தான் நாங்க எல்லோரும் நிம்மதி இல்லாம இருக்கோம்” என கூறுகிறார். அதற்கு மீனா, ”இவரு ஒரு வாரம் வேலைக்கு போகாம இருந்தப்போ இவரும் ரோகினியும் எல்லார் முன்னாடியும் வச்சி கேள்வி கேட்டாங்க இல்ல”. என கூறுகிறார்.
அண்ணாமலை முத்துவிடம், ”ரோகினி போனதுக்கு நீயும் ஒரு காரணம். இப்போ தனியே அவன் எங்க போய் தேடுவான் நீயும் கூட போ” என்கிறார். முத்துவும் மனோஜூம் ரோகினியை தேடி காரில் செல்கின்றனர். அப்போது முத்து, மனோஜை கிண்டலடித்துக் கொண்டே செல்கிறார். இதனால் கடுப்பாகும் மனோஜ் தன் அம்மாவுக்கு போன் செய்து முத்துவை பற்றி கம்ளைண்ட் செய்கிறார்.
மனோஜ், விஜயாவுக்கு போன் செய்து, “இவனை ஏன்மா என்னோட அனுப்பினிங்க இவன் என்னை இன்சல்ட் பண்ணிக்கிட்டே வரான் மா” என கூறுகிறார். இப்போ அவனோட தயவு நமக்கு தேவை என விஜயா கூறுகிறார். மனோஜ், ரோகினியின் பார்லருக்கு கால் செய்து பேசுகிறார். ரோகினி குமரிப் பாளையம் செல்லும் பேருந்து குறித்து விசாரித்ததாக அப்பெண் கூறுகிறார். இதனையடுத்து முத்து மீனாவையும் உடன் அழைத்துக் கொண்டு மூவரும் குமரிப்பாளையம் செல்கின்றனர்.
”எல்லா பொண்ணுங்களும் சண்டைப்போட்டா அவங்க அம்மா வீட்டுக்குதான் போவாங்க, உன் பொண்டாட்டி மட்டும் என்னடா குமரிப்பாளையம் போய் இருக்கா” என முத்து கூறுகிறார். வேற என்னதாண்டா தெரியும் உனக்கு பார்க்ல படுத்து தூங்க மட்டும்தான் தெரியும் என்கிறார். என்னை இறக்கி விட்ருடா நான் நடந்தே போய்க்கிறேன் என்கிறார் மனோஜ். மீனா முத்துவை கண்ட்ரோல் செய்கிறார். முத்து, போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே என பாட்டுப்பாடி மனோஜை கலாய்க்கிறார். தொடர்ந்து ரோகிணியை தேடி காரில் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.