மேலும் அறிய

Baakiyalakshmi Serial, August 14: முழு வில்லனாக மாறிய கோபி... பாக்கியலட்சுமியில் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

Baakiyalakshmi Today :* கோபத்தின்  உச்சத்தில் கொந்தளிக்கும் கோபி * ஜெனியின் சீமந்தத்தை சிம்பிளாக செய்ய முடிவெடுக்கிறார்கள்* பாக்கியச்செய்த செயலால் கடுப்பான இனியா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியிடம் போய் பாக்கியாவை பற்றி ஏத்திவிட வேண்டும் என்று சென்றவரை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் ஈஸ்வரி. உன்னால் தான் நாங்கள் தலைகுனிந்து நின்றோம். பாக்கியாவால் தான் நாங்கள் இப்போது பெருமைப்படுகிறோம் என சொல்ல கடுப்பான கோபி அதே கோபத்துடன் மிகவும் மன வருத்தத்துடன் வீட்டுக்கு வருகிறார். ராதிகா அவருக்கு ஆறுதல் சொல்கிறாள். 

"என்னை எல்லாரும் வில்லனா பாக்குறாங்க. அந்த பாக்கியா வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்தி கொண்டு இருக்கிறாள். அவளை எல்லாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்" என புலம்புகிறார் கோபி. நம்ம வாழ்க்கையை பார்க்கலாம். நீங்க ஏன் அவங்களை பத்தி யோசித்து கொண்டே இருக்கீங்க? என ராதிகா ஆறுதல் சொல்ல. அதை ஏற்று கொள்ள முடியாத கோபி "அந்த பாக்கியாவை தனியா நிக்க வைக்கணும். அவளை நான் நிச்சயமாக சும்மாவே விடமாட்டேன்" என புலம்பிய படி சவால் விட்டு செல்கிறார். 

Baakiyalakshmi Serial, August 14: முழு வில்லனாக மாறிய கோபி... பாக்கியலட்சுமியில் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

பாக்கியா வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் ஈஸ்வரியிடம் ஜெனியின் சீமந்தம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா ஜெனியின் சீமந்தத்தை மிகவும் கிராண்ட்டாக செய்ய வேண்டும் என சொல்கிறாள். ஜெனி அவளுடைய அப்பா மிகவும் பிஸியாக இருப்பதால் அவரால் வரவமுடியாது, குழந்தை பிறந்த உடனே கூட வந்த பார்க்க முடியாது என கூறியதாகவும் அதை சொல்லி மிகவும் வருத்தப்பட்டது பற்றியும் கூறுகிறாள். செழியன் பெயர் வைக்கும் விழாவை பெரிய அளவில் செய்து கொள்ளலாம், இப்போது சீமந்தத்தை சிம்பிளா வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என சொல்கிறான். 

அடுத்த நாள் காலை பாக்கியா அனைத்து வேலைகளையும் வேகவேகமாக முடித்து கொண்டு இருக்கிறாள். அமிர்தாவிடமும், செல்வியிடமும் கேன்டீனை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்கிறாள். நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை, அவர்கள் அப்படி நினைத்தால் நாம என்ன செய்வது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர்களிடம் சொல்லி கொண்டு இருக்கிறாள்.

ஸ்போக்கன் இங்கீலிஷ் கிளாஸ் பக்கத்தில் உள்ள ஒரு டீ கடையில் பழனிச்சாமி, லோபிதா மற்றும் பாக்கியா நின்று பேசிக்கொண்டு டீ குடித்து கொண்டு இருக்கிறார்கள். கோபியும் அவரது நண்பரும் அந்த சமயத்தில் அந்த பக்கம் காரில் வர கோபி இவர்களை பார்த்து புகைகிறார். இரண்டு பெரும் மாறி மாறி எப்படி நடிக்கிறார்கள் என கோபத்தில் அவர்களை பற்றி நக்கலாக பேசிக்கொண்டு இருக்கிறார். பாக்கியா தனக்கு காலேஜுக்கு நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்புகிறாள். 

Baakiyalakshmi Serial, August 14: முழு வில்லனாக மாறிய கோபி... பாக்கியலட்சுமியில் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

காலேஜில் பாக்கியா இனியாவுக்காக காத்து கொண்டு இருக்கிறாள். அப்போது இனியா தனது ப்ரெண்ட்ஸ் உடன் வருகிறாள். இனியாவின் தோழிகள் அனைவரும் பாக்கியாவுக்கு ஹாய் சொல்கிறார்கள். பாக்கியா அவர்களுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வந்து இருப்பதாக சொல்லி அதை கொடுக்கிறாள். அனைவரும் அதை சாப்பிட்டு பாக்கியாவை பாராட்டுகிறார்கள். இனியாவின் தோழிகள் அவர்களுடைய அம்மாவிடம் பாக்கியாவை பற்றி சொன்னதாகவும்  அவர்களும் பாராட்டுவதாகவும் கூறுகிறார்கள். இதை கேட்ட கடுப்பில் இனியா ஏதும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget