Ethirneechal: அப்பத்தா, குணசேகரனுக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் கதிர், ஞானம்.. பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்!
Ethirneechal Nov 14: அப்பத்தாவுக்கும் குணசேகரனுக்கும் என்ன நடந்தது? ஏன் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. கதறி அழும் குடும்பத்தினர். பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் எபிசோட்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தியுடன் சேர்ந்து பெண்கள் அனைவரும் ஒரு பக்கம் அப்பத்தாவை எங்கே அழைத்துச் சென்றார்கள் எனத் தேடிக் கொண்டிருக்க, மறுபக்கம் குணசேகரன் செல்லும் காரில் அப்பத்தா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். கரிகாலன், கதிர் மற்றும் ஞானம் பதட்டமாக இருக்க குணசேகரன் கொஞ்சமும் அசராமல் செல்கிறார்.
சக்தியும் ஜனனியும் பதட்டத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாகத் தேடி பார்க்கிறார்கள். ஆனால் அங்கு எங்கும் அப்பத்தாவை அழைத்து வரவில்லை என தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்பத்தா சொத்தை எழுதி வைத்தது பற்றி தெரிந்ததில் இருந்தே கோபமாக இருக்கும் குணசேகரன் மற்றும் கதிர் தான் அப்பத்தாவை கடத்தி கொண்டு போய் வைத்து மிரட்டுவார்கள் என நந்தினி புலம்பி கொண்டே வருகிறாள்.
ஜீவானந்தம் கௌதமை சென்று சந்திக்கிறார். கெளதம் ஒரு அப்பாவியை சுட்டதாக நினைத்து ஜீவானந்தம் கௌதமை திட்டுகிறார். சுடப்பட்ட அந்த நபர் அப்பாவியல்ல, அவன் ஜீவானந்தத்தையும், பட்டம்மாளையும் சுட வந்தவன் என்பதையும், அவன் மேடையின் முன்னால் நின்று துப்பாக்கியை எடுத்ததை பார்த்த பிறகு தான் அவனை சுட்டதாகவும் கெளதம் சொன்ன பிறகு தான் ஜீவானந்தத்திற்கு உண்மை என்ன என்பது புரிகிறது. கௌதமை கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கும்படி சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஞானம் சக்திக்கு போன் செய்து அனைவரையும் கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்கிறான். சக்தி அப்பத்தாவுக்கு என்ன நடந்து என கேட்டும் எதுவும் சொல்லவில்லை. ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து அப்பத்தாவின் உயிருக்கு ஆபத்து இருப்பது பற்றி சொல்லும் போது போன் கட்டாகி விடுகிறது. பின்னர் அனைவரும் கிளம்பி வீட்டுக்கு செல்கிறார்கள்.
வீட்டுக்குச் சென்று வீடு முழுவதும் தேடுகிறார்கள். ஆனால் யாருமே வீட்டில் இல்லை. வாட்ச்மேன் மூலம் வேறுயாரும் வீட்டுக்கு வரவில்லை என்ற உண்மையை தெரிந்து ஷாக்ககிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஞானம் காரை பதட்டமாக ஓட்ட, காரில் உள்ள கதிர், குணசேகரன் என அனைவருமே பதட்டமாக இருக்கிறார்கள். காரை யாரோ விரட்டி வருகிறார்கள். காரை ஞானம் வேகமாக ஓட்டினாலும் அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். விரட்டி வருபவர்களை ஒரு கை பார்த்து விட்டு தான் வண்டியை எடுக்க வேண்டும் என குணசேகரன் சொல்ல, நால்வரும் அப்பத்தாவை காரிலேயே விட்டுவிட்டு கீழே இறங்குகிறார்கள்.
வீட்டுக்கு குணசேகரன் கார் வருகிறது. அனைவரும் சோகமாக வந்து இறங்குகிறார்கள். கதிரும் ஞானமும் உடைந்து அழுகிறார்கள். ஆனால் குணசேகரனும் அப்பத்தாவும் அவர்களுடன் வரவில்லை. அவர்களைப் பார்த்து ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, சக்தி, ஜனனி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "ஏன் எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க?" என கேட்க பிரம்மை பிடித்தது போல நிற்கிறான் கதிர்.
சக்தி கதிரிடம் "அண்ணனும் அப்பத்தாவும் எங்க?" எனக் கேட்கிறான். "எல்லாத்துக்கும் அந்த ஜீவானந்தம் தான் காரணம்" என கதிர் சொல்கிறான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைய கதறி கதறி அழுகிறார்கள். ஜனனி கதிரை ஓங்கி அறைந்து விடுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.