மேலும் அறிய

Ethirneechal: குணசேகரனை அதட்டிய கதிர்.. ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal: நந்தினியை குணசேகரன் அவமரியாதையாகப் பேச பொங்கி எழுந்த கதிரை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 7) எபிசோடில் தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என குணசேகரன் செய்து வைத்த சத்தியத்தையும், ஜான்சி ராணி விடாப்பிடியாக தர்ஷினியை வண்டியில் ஏற்ற முயற்சி செய்ததை நினைத்து தர்ஷனிடம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். தர்ஷன் அவளை சமாதானம் செய்கிறான், ஆனாலும் தர்ஷினி அதை ஏற்க மறுக்கிறாள். பொறுமையாக இருப்பேன் ஆனால் ஏதாவது பிரச்சினை வந்தால் நான் என்னுடைய வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விடுவேன். இதை நீங்கள் யாருடன் யாரிடமும் சொல்ல கூடாது என ஐஸ்வர்யா, தாரா மற்றும் தர்ஷனிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

Ethirneechal: குணசேகரனை அதட்டிய கதிர்.. ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சலில் இன்று!
குணசேகரன் உடனே போலீஸ் ஸ்டேஷனில் வந்து சரண்டராக வேண்டும்  இல்லைனா நான் அரெஸ்ட் வாரென்ட் வாங்கி அவரை கைது செய்துவிடுவேன் என இன்ஸ்பெக்டர் எகிறுகிறார். காருக்குள் பதுக்கி இருந்த குணசேகரன் பொம்பளைகளை விட்டுப் பிடிக்க வேண்டும் என சொல்கிறார்.

மெய்யப்பன் குரூப் ஆஃப் கம்பனிகாரர்களின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வருகிறார். அவரிடம், ஓடிப்போன நாச்சியப்பன் வந்து விட்டதாக அவரிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ஆத்தா. கோயில் மரியாதை திரும்பவும் இந்த குடும்பத்துக்கு வரவேண்டும் என்றால் நாச்சியப்பன் மனைவி தாலியை கழட்டி கொடுக்க வேண்டும் என அவர் சொல்கிறார். நாச்சியப்பனின் சகோதரி உமையாள், ஜனனியின் அம்மாவை வரவழைத்து நான் சடங்குகளை செய்ய வைக்கிறேன் என சொல்கிறாள்.  

வக்கீல் வந்ததும் பதுங்கி இருந்த குணசேகரன் காரை விட்டு இறங்குகிறார். வக்கீல் பெயிலுடன் வந்ததால் குணசேகரனை கிளம்ப சொல்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் குணசேகரனுக்கு பெயில் எடுக்க உதவியது மெய்யப்பன் குடும்பத்தின் பேரன்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி தான்.

ஜனனியின் அம்மா “சென்னைக்கு திரும்பி போக முடியாது, எங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் இந்த உண்மை தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதனால் உங்க பெரிய அண்ணன் குணசேகரன் வருவதற்கு முன்னர் நான் இங்கு இருந்து கிளம்புகிறேன்” என சொல்லிக் கொண்டு இருக்கும் சமயத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து இறங்குகிறார். 

Ethirneechal: குணசேகரனை அதட்டிய கதிர்.. ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சலில் இன்று!

அவர் வந்ததும் ஜனனியின் அம்மாவை நலம் விசாரித்து “எனக்கு எல்லா உண்மையும் தெரியும், தம்பிகள் சொன்னார்கள்” என சொல்கிறார். ஜனனியின் அம்மா வருத்தப்பட்டு பேசுகிறார். அதனால் அவரை இங்கேயே இருக்க சொல்லி குணசேகரன் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 8) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.  
 
விசாலாட்சி அம்மாவின் தம்பி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் குணசேகரன் எலெக்ஷன் ரிசல்ட் பற்றி கேட்கிறார். அதற்கு அவர் "நான் ஏற்கனவே இந்த வீட்டு மருமகள்கள் கிட்ட சொல்லிட்டேன்" என அவர் சொல்ல, கடுப்பான குணசேகரன் ஈஸ்வரி பார்த்து முறைக்கிறார். "அதுக்கு தான் இத்தனை ஆட்டம் போட்டு கிட்டு இருந்தியா?" எனக் கேட்க "இப்போ என்ன  ஆடிட்டோம்?" என நந்தினி அதட்டலாக கேட்க "ஏய் ! வாயை மூடுடி" என்கிறார் குணசேகரன்.
 
உடனே கதிர் உரக்க கத்தி அண்ணனை அடக்குகிறான். "வாடி போடின்னு எல்லாம் பேசாதீங்க அண்ணா" என சொல்ல அனைவருக்கும் செம்ம ஷாக்காக இருக்கிறது. நம்ம கதிரா இது என அனைவரும் அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்!

தலைப்பு செய்திகள்

Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget