![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Saregamapa Little Champs: 11 பேரில் ஃபைனலுக்கு செல்லப்போவது யார்? இறுதிக்கட்டத்தை நெருங்கும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்!
மூன்றாவது சீசன் 28 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி வாராவாரம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கத் தொடங்கியுள்ளது.
![Saregamapa Little Champs: 11 பேரில் ஃபைனலுக்கு செல்லப்போவது யார்? இறுதிக்கட்டத்தை நெருங்கும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்! sa re ga ma pa little champs 2023 tamil this week end episode nearing grand finale Saregamapa Little Champs: 11 பேரில் ஃபைனலுக்கு செல்லப்போவது யார்? இறுதிக்கட்டத்தை நெருங்கும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/1a5f79b440de2a5fbe9ef37f56764de91700325911553574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்'. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 28 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி வாராவாரம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கத் தொடங்கியுள்ளது.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியில், தற்போது 11 பேர் மட்டுமே போட்டிக்களத்தில் இருந்து வருகின்றனர். கடந்த வாரம் ஃபேமிலி ரவுண்ட், தீபாவளி ஸ்பெஷல் ரவுண்ட் ஆகியவை நடந்து முடிந்தன.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ‘ஓல்ட் ஈஸ் கோல்டு’ எனும் ரவுண்ட் நடைபெறுகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பழைய பாடல்களைத் தேர்வு செய்து இந்த ரவுண்டில் பாடுகின்றனர். இதுகுறித்த ப்ரோமோக்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த வாரம் 11 போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரவுண்ட் கடுமையானதாகவும் அனல் பறக்கும் ரவுண்டாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் டிசம்பர் 17ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடக்க உள்ள நிலையில் இனி வாரா வாரம் அனல் பறக்கும், போட்டியும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)