Parijatham Serial: அப்பாவையே மாற்றிய ஸ்ரீஜா.. இசைதான் மருமகள் - பாரிஜாதத்தில் இன்று
ஸ்ரீஜா அப்பாவை மாற்றிய நிலையில் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ஸ்ரீஜா சிக்கி கொள்ள சுபத்ரா அவளை மன்னித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசைதான் சரியான மருமகள்:
அதாவது, ஸ்ரீஜா அப்பாவுக்கு போன் செய்து நடந்ததை சொல்ல அவர் நான் வந்தா பிரச்சனை ஆயிடும் என வர மறுக்கிறார். பிறகு ஸ்ரீஜா வேறொருவரை அப்பாவாக நடிக்க வைத்து சமாளிக்கிறாள். பிறகு நடிகை நளினி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக மண்டபத்திற்கு வருகிறார். ஸ்ரீஜா நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. நடந்த விஷயத்தை அறிந்து இசை தான் சரியான மருமகள் என்ற முடிவுக்கு வருகிறார். அதை சுபத்ராவிடமும் தெரியப்படுத்துகிறாள்.
கடுப்பாகிய ஸ்ரீஜா:
அதன் பிறகு வாங்கி வந்த அன்பளிப்பையும் இசைக்கு கொடுத்து விட்டு செல்ல ஸ்ரீஜா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்





















