மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில், அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார்த்திக் உண்மையைச் சொல்லிவிடுவானோ? என்ற பதற்றத்தில் சிவனாண்டி தரப்பு இருக்க, ரேவதியைக் கடத்தி கார்த்திக்குக்குச் செக் வைக்கிறார் சந்திரகலா.

சதீஷின் வேஷத்தால் வெளிவந்த உண்மை!

தனக்குத் தேவையான ஒரு தோற்றத்தைக் காட்டி, அதே மாதிரி ஒருவரைத் தயார் செய்து தருமாறு தானாராவ்விடம் கேட்கிறார் மகேஸ்வரன் என்கிற மயில்வாகனம். அந்தத் தோற்றத்தைப் பார்த்ததும் அது சதீஷின் தோற்றம் என்பது தெரியவருகிறது. 

இதனால் சந்தேகமடைந்த அவர், தொழிலுக்குத் துரோகம் செய்ய முயன்றவரை மிரட்டி உண்மையை வரவழைக்கிறார். வேறு வழியில்லாமல் அவரும் உண்மையை ஒப்புக்கொள்கிறார்.

மண்டபத்தில் பணம், அதிர்ச்சியில் சிவனாண்டி:

திருமண மண்டபத்தில் சாமுண்டீஸ்வரியின் அறையில், சிவனாண்டிக்குக் கொடுக்கப்பட்ட பணம் இருப்பதைப் பார்க்கிறார் சந்திரகலா. இந்தப் பணம் இங்கே எப்படி வந்தது? ஒருவேளை அக்காவுக்கு உண்மை தெரிந்துவிட்டதா? என்று குழப்பமடைகிறாள்.

வேஷம் போட்டுக்கொண்டு வந்தவன்தான் பணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று இருவரும் பேசிக்கொள்கின்றனர். இதற்கிடையில், கார்த்திக்கை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று பார்க்கின்றனர். ஆனால் அங்கே கார்த்திக் இல்லை. அவனது ஆட்கள் அனைவரும் அடிவாங்கி மயங்கிக் கிடக்கின்றனர். கார்த்திக் தப்பித்துவிட்டதைப் பார்த்து சிவனாண்டி அதிர்ச்சியடைகிறார்.

மறுபுறம், சுவாதியும் தனலட்சுமியும் சிறைக்குச் சென்று பரமேஸ்வரி பாட்டியைச் சந்திக்கின்றனர். தனக்குத் திருமணம் நடக்கவிருக்கும் விஷயத்தைப் பாட்டியிடம் சொல்லும் சுவாதி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். இதனால் அந்தச் சந்திப்பு நெகிழ்ச்சியாக அமைகிறது.

ரேவதியைக் கடத்திய சந்திரகலா:

கார்த்திக்கிற்கு உண்மை தெரிந்துவிட்டதால், அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிவனாண்டி தரப்பு திட்டம் போடுகிறது. அதன்படி, திருமண மண்டபத்திலிருந்து ரேவதியை ரகசியமாகக் கடத்தி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றனர்.

கார்த்திக்குக்கு சந்திரகலா வைத்த செக்:

இதற்கிடையில், மண்டபத்திற்குள் வரும் கார்த்திக்கை வழிமறிக்கிறார் சந்திரகலா. “உண்மையைச் சொல்லத்தானே போறீங்க? நேரா போய் அக்காகிட்ட உண்மையைச் சொல்லுங்க” என்று சவால் விடுகிறார்.

கார்த்திக் யோசித்துக்கொண்டிருக்கும்போது, “எல்லாம் சரிதான்... ஆனா ரேவதியை மிஸ் பண்ணிட்டீங்களே!” என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் சந்திரகலா.

கார்த்திக் தப்பிப்பது எப்படி?

உடனே மயில்வாகனத்திடம் உள்ளே சென்று பார்க்கச் சொல்கிறார் கார்த்திக். அங்கே ரேவதி இல்லை என்பது உறுதியாகிறது. அடுத்ததாக, ரேவதியைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் காட்சியைத் தனது செல்போனில் காட்டி கார்த்திக்கை மிரட்டுகிறார் சந்திரகலா.

ரேவதியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கார்த்திக், உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். சந்திரகலாவின் இந்தச் சதியில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கப் போகிறான்? ரேவதியைப் பத்திரமாக மீட்பானா? சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்லும் வாய்ப்பை இழந்துவிடுவானா? என்பது குறித்து அறிய ‘கார்த்திகை தீபம்’ தொடரை திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்! 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget