மேலும் அறிய

Pandian stores : என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகுதா? பார்ட் 2-இல் நாங்கள் இல்லை.. வெளியான ஷாக்கிங் நியூஸ்

விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்து அதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட உள்ளது என்ற தகவல் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' (Pandian Stores). கூட்டு குடும்பமாக நான்கு அண்ணன் தம்பிகள் அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என்ற அந்நியோன்யமான குடும்பத்தை சுற்றியும் நடைபெறும் கதைக்களம் என்பதால் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சென்டிமெண்டான இந்த சீரியலை தவறாமல் ரசிகர்கள் பார்த்து வருவதால் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Pandian stores : என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகுதா? பார்ட் 2-இல் நாங்கள் இல்லை.. வெளியான ஷாக்கிங் நியூஸ்

பேன் ஃபாலோவர்ஸ்:

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், லாவண்யா, ஹேமா, சரவணா விக்ரம், விஜே தீபிகா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மிகவும் விறுவிறுப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களுக்கு தனித்தனியே எக்கச்சக்கமான பேன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.  

பரபரப்பான கட்டம்: 

சமீபத்தில் தான் வீட்டுக்கு தெரியாமல் மீனா, உதவியோடு தனத்திற்கு கேன்சர் கட்டி அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது நலமாக இருக்கிறார். இந்த உண்மையை கண்டுபிடித்த ஐஸ்வர்யா தனது யூடியூப் சேனலில் அதை வீடியோவாக போட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உண்மை தெரிந்து பெரிய பூகம்பம் வெடிக்கிறது. இது தான் தற்போதய கதைக்களமாக பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 :
 
சமீபத்தில்தான் பாண்டியன் ஸ்டோரிஸ் குடும்பம் புதிய வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். மீனாவும் ஜீவாவும் கூட மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார்கள். மிகவும் சுமூகமாக நகர்ந்த இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் சில நாட்களாக இணையத்தில் வெளியாகி வருகிறது. இது முடிந்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 எடுக்க சேனல் முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன.    

 
Pandian stores : என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகுதா? பார்ட் 2-இல் நாங்கள் இல்லை.. வெளியான ஷாக்கிங் நியூஸ்
 
முதல் பாகத்தை முடித்துவிட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு என அடுத்த சீசனை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயர் பாண்டியன் இல்லம் என மாற்ற யோசனை செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாவது சீசனில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் ரசிகர்களும் அதை தான் விரும்புவார்கள். 
 
ஆனால் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனும் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவும் சில காரணங்களால் சீரியலில் தொடர முடியாது என கூறியதால் அவர்களிடம்  சேனல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அப்படி அவர்கள் ஒத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் இல்லையேல் அவர்களுக்கு பதிலாக வேறு இரு நடிகர்களை வைத்து  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 எடுக்கப்படும் இல்லையேல் இந்த முதல் பாகத்தோடு சீரியலை முடித்து விடலாம் என சீரியல் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீவிர ரசிகர்கள் சீரியல் முடிய போவதை நினைத்து வருத்தமாக இருந்தாலும் சீசன் 2 வரப்போகிறது என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget