மேலும் அறிய

Karthigai Deepam: கடுப்பாகும் ரம்யா! நலங்கு வைக்கும் கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று நடக்கப்போவது இதுதான்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழில் தொலைக்காட்சி தொடர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடருக்கு மிகுந்த வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது.  தினமும் இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவை கோவிலுக்கு வர வைத்து ரமேஷ் அபிராமியிடம் பரிகாரம் செய்ய வந்திருப்பதாக சொல்லி கோர்த்து விட்ட நிலையில், இன்று என்ன நடக்கப் போகிறது என்ன? என்பதை அறியலாம்.

கடுப்பாகும் ரம்யா:

இன்று வரப்போகும் எபிசோடில் ரம்யாவை அங்கபிரதட்சனம் செய்ய வைக்கின்றனர், அவளும் அபிராமி இருப்பதால் கோபத்தை காட்ட முடியாமல் செய்து முடிக்கிறாள். இந்த பரிகாரம் நடந்து முடிந்ததும் அடுத்ததாக தீச்சட்டியை கையில் கொடுத்து கோவிலை சுற்றி வர வைக்கின்றனர். 

இதனை தொடர்ந்து எல்லாரும் ரமேஷ், ரம்யாவை பார்த்து அப்படியே சூர்யா, ஜோதிகா போலவே இருக்கீங்க என்று பாராட்டுகின்றனர். அதே போல் அய்யர் அப்படியே சிவன் பார்வதி போலவே இருக்கீங்க என்று சொல்ல ரம்யா கடுப்பாகிறாள். கடைசியாக ரமேஷ் கோவிலுக்கு வெளியே எல்லாருக்கும் பணத்தை கொடுக்க இது மொத்தமும் அவனோட செட்டப் என்பது தெரிய வருகிறது. 

நலங்கு வைக்கும் கார்த்திக்:

அதன் பிறகு அபிராமி வீட்டில் தீபாவை உட்கார வைத்து நலங்கு வைகின்றனர், இறுதியாக அபிராமி எல்லாரையும் விட யார் நலங்கு வச்சா தீபா சந்தோசப்படுவானு தெரியும் என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட்டு நலங்கு வைக்க சொல்ல இதை பார்த்து ரம்யா டென்ஷனாகிறாள். அதோடு மணக்கோலத்தில் இருக்கும் தனக்கு கார்த்திக் நலங்கு வைத்து விடுவதை போலவும் நினைத்து பார்க்கிறாள். 

பிறகு ரமேஷ் கார்த்திக் சார் தீபாவுக்கு நலங்கு வைத்தது போல ரம்யாவுக்கு நான் நலங்கு வைக்கணும் என்று சொல்ல ரம்யா அதெல்லாம் அனுமதிக்காதீங்க என்று சொல்ல அபிராமி ஆசைப்படுறாருல வைக்கட்டும் என்று சொல்லி ரமேஷை நலங்கு வைக்க வைக்கிறாள். 

ஒட்டுக் கேட்கும் ஐஸ்வர்யா:

இறுதியாக கார்த்திக் ரமேஷை தனியாக கூப்பிட்டு நீ பண்றதெல்லாம் பார்த்தால் நடிக்கிற மாதிரி தெரியலையே என்று சொல்ல ரமேஷ் ரம்யாவை உண்மையாகவே பிடித்திருப்பதாக சொல்கிறான். ஆனால் கார்த்திக் ரம்யா அப்பா கேட்டுக்கிட்டதால் தான் உன்னை கூட்டிட்டு வந்ததாக சொல்ல ஐஸ்வர்யா இதை ஒட்டு கேட்டு விடுகிறாள். 

இதெல்லாம் கார்த்தியோட பிளான் என்பதை அறியும் அவள் ரம்யாவிடம் போட்டு கொடுக்க முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget