Karthigai Deepam: மாமியாரிடம் கோபப்படும் ரேவதி! மாட்டிக்கொள்வாளா அபிராமி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அபிராமியை வீட்டுக்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்னை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போலீஸ் ஸ்டேஷன் போகும் சாமுண்டீஸ்வரி:
அதாவது சந்திரகலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சிவனாண்டி சொன்னது போல மகேஷ் காணாமல் போனதுக்கு சாமுண்டீஸ்வரி தான் காரணம் என சந்தேகப்படுவதாக புகார் கொடுக்கிறாள். இதனால் போலீஸ் சாமுண்டீஸ்வரியை விசாரிப்பதாக சொல்லி அனுப்புகின்றனர்.
அதன் பிறகு அபிராமி கோவில் இருந்து பூ வாங்கிக் கொண்டு கார்த்திக் ரேவதியை சந்திக்க சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். இதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சாமுண்டீஸ்வரிக்கு போன் கால் வர வேறு வழியில்லாமல் அவள் சந்திரகலாவை அழைத்துக் கொண்டு கிளம்பி செல்கிறாள்.
சமாளிக்கும் அபிராமி:
வீட்டுக்கு வந்த அபிராமி கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி மற்றும் ராஜராஜன் சந்தித்துக்கொண்ட அபிராமி அண்ணா என கூப்பிட அண்ணாவா? என்று எல்லோரும் கேட்க சிலர் சம்மந்தியை அப்படித்தான் கூப்பிடுவாங்க என்று சொல்லி சமாளிக்கிறாள்.
கோபப்படும் ரேவதி:
அதன் பிறகு ரேவதி தனியாக சந்தித்து பேசும் அபிராமி என் பையன் தப்பு பண்ணி இருந்தா நெனச்ச.. ஆனா நல்லது நினைச்சு தான் செய்தான். அது உனக்கு போக போக புரியும் என்று சொல்ல ரேவதி உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறிங்களா என கோபப்படுகிறாள்.
அடுத்ததாக கார்த்தியின் நண்பன் நவீன் துர்காவை காதலிப்பதாக சொல்லி இங்கே வேலைக்கு சென்று விட்டதாக வீட்டுக்குள் வர கார்த்திக் மற்றும் ராஜராஜன் இருவரும் நவீனை திட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

