Karthigai Deepam: கார்த்தியிடம் டிராமா போடும் தீபா.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
Karthigai Deepam Sep.28: ரூபஸ்ரீ போன் போட்டு தர தீபா பல்லவியாக பேசி நடிக்க, கார்த்திக் அப்படியே பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து திடீரென தீபா ரூமின் கதவைத் திறக்க, தீபா பாடுவதை நிறுத்தி விடுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கார்த்திக் போன் வந்து வெளியே போக, மைதிலி "என்னாச்சு எங்க போறாரு?” எனக் கேட்க, “எனக்கே ஏதோ கிளைண்ட் மீட்டிங்னு சொன்னாரு" என தீபா சொல்கிறாள்.
ரூபஸ்ரீ கார்த்திக்கு போன் செய்து “உங்களை நேரில் பார்க்க வேண்டும்” என சொல்ல, கார்த்திக் அவளை சென்று பார்க்க, “ஆமா இவ்வளவு நாளா பாடினது நான் கிடையாது.. பல்லவி என்ற பொண்ணு தான் பாடிட்டு இருக்கா. எனக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு வராது, அதனால எங்க அம்மா இப்படி பண்ணாங்க.
அந்தப் பொண்ணு ரொம்ப வறுமையில இருக்கறதுனால இதுக்கு ஒத்துக்கிட்டா” என்று சொல்ல, “ஒருத்தரோட வறுமையை இப்படி பயன்படுத்துவது தப்பு கிடையாதா” என திட்டி தீர்க்கிறான். எனக்கு அந்த பல்லவியை பார்க்கணும் என்று சொல்ல, ரூபஸ்ரீ அதெல்லாம் முடியாது என சொல்ல, சரி போனிலாவது பேச வேண்டும் என்று கூறுகிறான்.
பிறகு ரூபஸ்ரீ போன் போட்டு தர தீபா பல்லவியாக பேசி நடிக்க, கார்த்திக் அப்படியே பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து திடீரென தீபா ரூமின் கதவைத் திறக்க, தீபா பாடுவதை நிறுத்தி விடுகிறாள்.
கார்த்திக் இங்கு இருப்பது தெரியாமல் வந்து விட்டதாக சொல்லி பதற்றமாக இருக்க, ஜானகி “என்னாச்சு எனக்கு ஊருக்கு கிளம்புறேன்” என்று சொல்லி கார்த்திக் வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.