மேலும் அறிய

Karthigai Deepam: கடும் கோபத்துடன் தர்மலிங்கம் வீட்டுக்கு வந்த கார்த்திக்: சிதம்பரத்துக்கு அதிர்ச்சி: கார்த்திகை தீபம் அப்டேட்!

தீபாவுக்கு பிரச்சனை வராதா என்று இளையராஜா கேட்க, இல்ல “தீபா இவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும்” என கார்த்திக் கூறுகிறான்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தான் பல்லவி என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது தீபா தான் பல்லவி என்பதை அறிந்த கார்த்திக், கோபத்துடன் நேராக தீபா வீட்டிற்கு வந்து தர்மலிங்கத்திடம் “இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க? இது ரொம்ப பெரிய தப்பு” என்று சொல்ல, அவர் “நீங்க கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு, ஆனா நடந்த விஷயங்களை முழுசா கேளுங்க” என்று, ராஜஸ்ரீ சத்தியம் வாங்கியது, தம்பிக்காக பாடுவது என அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். 

இனியனும் “மாமா நீங்க அக்காவை தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கு கோபம் இருந்தால் என்னை கூட அடிச்சுக்கோங்க” என்று சொல்ல, கார்த்திக் சமாதானமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறான். இளையராஜாவிடம் பல்லவியாக பாடிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி தீபா தான் என்று சொல்ல, அவனும் ஷாக் ஆகிறான். 

மேலும் கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போவதாக சொல்ல, இதனால் தீபாவுக்கு பிரச்சனை வராதா என்று இளையராஜா கேட்க, இல்ல “தீபா இவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும்” என கூறுகிறான். மறுபக்கம் மீண்டும் தீபாவை வழிமறிக்கும் சிதம்பரம், தனக்காக பாட கூப்பிட, தீபா முடியாது என்று மறுக்க, “கார்த்திக்கிடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லிவிடுவேன்” என மிரட்ட, போய் சொல்லுங்க என்று தீபா பதிலடி கொடுக்கிறாள். 

பிறகு மீனாட்சி “அந்த ஆள் பொய் சொல்லிட போறாரு” என்று சொல்ல, “போய் சொல்லட்டும் அப்போதாவது அவருக்கு விஷயம் தெரியும், நானே அவரிடம் சொல்லலாம் என்று தான் இருக்கிறேன்” என்று சொல்கிறாள். அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க, இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான்.

 “நீங்க என்னோட மியூசிக் கரியரை கெடுக்க என்னென்னமோ பண்ணுங்க, இனிமேல் உங்களோடத நான் அழிக்கிறேன்” என்று கார்த்திக் சவால் விட சிதம்பரம் அங்கிருந்து ஆவேசத்துடன் கிளம்பி வரும்போது வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கார் ஆக்சிடென்ட் ஆகிறது. 

அதன் பிறகு அபிராமி கார்த்திக் ஜாதகத்தை கொண்டு பொய் ஜோசியர் ஒருவரிடம் கேட்க, அவர் இப்போதைக்கு நேரம் சரியில்லை அவருடைய மனைவி தொடர்ந்து 52 நாட்கள் விளக்கு போட வேண்டும் தவறினால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் இந்த வார எபிசோடுகள் நிறைவடைகின்றன. 

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget