EthirNeechal: என்ன ஆதிரை இதெல்லாம் .. கரிகாலனோடு காதல் மொழி பேசும் வீடியோ இணையத்தில் வைரல்..!
எதிர்நீச்சல் சீரியலில் வரும் ஆதிரை,கரிகாலன் இருவரும் ரீல்ஸ் செய்த வீடியோ கடந்த இரு தினங்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் வரும் ஆதிரை,கரிகாலன் இருவரும் ரீல்ஸ் செய்த வீடியோ கடந்த இரு தினங்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று வயது வித்தியாசம் இல்லாத தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. முன்னொரு காலத்தில் ஒளிபரப்பான பழைய சீரியலை மறுஒளிபரப்பு செய்தாலும் உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தான் பல மாதங்களாகவே டிஆர்பி நம்பர் ஒன்றாக உள்ளது.
இந்த சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, நடிகைகள் பாம்பே ஞானம், மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், கமலேஷ் , சத்யா தேவராஜன், சத்தியப்ரியா, காயத்திரி கிருஷ்ணன், ராதிகா வைரவேலவன், விமல் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த சில எபிசோட்களாக இயக்குநர் திருச்செல்வமும் இணைந்துள்ளார். பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர்.
இதனிடையே எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனுக்கும், ஆதிரைச் செல்விக்கும் இடையே கடந்த வாரம் கட்டாய திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் ஆதிரை மீது ரசிகர்களுக்கு பரிதாபம் ஏற்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கரிகாலன் - ஆதிரை தொடர்பான காட்சிகளில் என்ன நடக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. கரிகாலனாக விமலும், ஆதிரை செல்வியாக சத்யா தேவராஜனும் நடிக்கின்றனர்.
இப்படியான நிலையில் திரையில் எலியும், பூனையுமாக அடித்துக் கொண்டாலும், ஆஃப் த ஸ்க்ரீனில் விமலும், சத்யாவும் கலகலப்பான கேரக்டர்கள் தான். இதனிடையே சர்வம் படத்தில் வரும் ஆர்யா - த்ரிஷா பேசும் வசனங்களை ரீல்ஸ் செய்து சத்யா சில தினங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram