இந்த வாரம் ஜி.வி. பிரகாஷ் வாரம்..! கலர்ஸ் தமிழில் கலக்கப்போகும் படங்கள்..!
ஜிவி பிரகாஷ் வாரமாக இந்த வாரம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த வாரம் கலர்ஸ் தமிழில் ஜிவி பிரகாஷ் வாரமாக, அவர் நடித்த த்ரில்லர் திரைபடங்கள் ஒளிபரப்படுகின்றன.
திங்கள் கிழமை - வாட்ச்மேன்
திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு ‘வாட்ச்மேன்’ படம் ஒளிபரப்பாக உள்ளது. கிரைம் தில்லர் படமான வாட்ச்மேன் படத்தை விஜய் எழுதி இயக்கி உள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, சம்யுக்தா ஹெக்டேவும், யோகிபாபு, சுமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். "போ!" என்ற வார்த்தையில் இருந்து கதை தொடங்குகிறது. ஒரு பெரிய வில்லா இருக்கும் ஊரில் இரவில் யாரும் இல்லை என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் கொள்ளையடிப்பதே படத்தின் கதையாக உள்ளது. மர்மங்களையும், த்ரில்லர் காட்சிகளையும் கொண்ட இந்த படம் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை தரலாம்.
செவ்வாய் கிழமை - ஐங்கரன்
ஆக்ஷன் டிராமா படமான ‘ஐங்கரன்’ செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அரசு எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஆரிஷ் பரேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தனது கண்டுப்பிடிப்புக்கு காப்புரிமை பெற போராடுவதே கதையின் கருவாக உள்ளது.
புதன் கிழமை - செல்பி
அறிமுக இயக்குநர் மதி மாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘செல்ஃபி’ படம் புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில், வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன் மற்றும் சுப்ரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். கல்லூரி படிப்புகான சேர்க்கையை சட்ட விரோதமாக விற்பனை செய்வதும், அந்த கும்பலில் சிக்கி கொள்ளும் பொறியியல் மாணவரான கனல் (நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில்) என்ற இளைஞரின் வாழ்க்கையை திரைக்கதை அழகாக சித்தரிக்கிறது. கல்வி உலகில் நிலவும் ஊழல் சம்பவங்களை பேசும் படமாக இருக்கும் செல்பி அதிரடி திருப்பங்களை கொண்டது.
வியாழக்கிழமை - சர்வம் தாளமயம்
வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு 'சர்வம் தாளமயம்' படம் ஒளிபரப்பாகிறது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் தேதி வெளி வந்த இந்த படத்தில் அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளது.