![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: மிரட்டிய இனியா... பதறிப்போன கோபி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்கப்போவது இதுதான்..!
Bhagyalakshmi Serial Written Update Today (29.12.2022): பாக்கியலட்சுமி சீரியலில் தேர்வில் மார்க் குறைவாக வாங்கியதற்காக கோபி இனியாவை திட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
![Bhagyalakshmi Serial: மிரட்டிய இனியா... பதறிப்போன கோபி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்கப்போவது இதுதான்..! bhagyalakshmi serial written update today 29th december 2022 episode 699 Gopinath as he gets upset seeing Iniyas progress report Bhagyalakshmi Serial: மிரட்டிய இனியா... பதறிப்போன கோபி... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்கப்போவது இதுதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/29/ec139caaa6ed17f3a5db54ee802d87c61672282007215572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் தேர்வில் மார்க் குறைவாக வாங்கியதற்காக கோபி இனியாவை திட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
மிரட்டிய இனியா
அமிர்தாவை சந்திக்கும் எழில் அவரை பாக்யாவிடம் போனில் பேசவைக்கிறார். பிரச்சினைன்னு வர்றப்ப ஓடி ஒளியக்கூடாது என அட்வைஸ் பண்ணும் பாக்யா, அமிர்தாவை தைரியமாக இருக்க சொல்கிறார். பின்னர் எழில் வீட்டுக்கு வந்தா அப்பா, அம்மா கோபப்படுவாங்க. அதனால நான் இன்னொரு நாள் வர்றேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இதனையடுத்து ஆபீஸில் இருந்து லேட்டாக வரும் கோபியிடம் மயூ தனக்கு பள்ளியில் ரேங்க் கார்டு கொடுத்ததாக காட்டுகிறார். அவர் வாங்கியுள்ள மார்க்கை பார்த்து பாராட்டும் அவர், இனியாவிடம் உனக்கு ரேங்க் கார்டு கொடுத்துருப்பாங்களே என கேட்கிறார். தயங்கியபடி தன்னுடைய கார்டை எடுத்து காட்டுகிறார். அவர் மார்க் குறைவாக எடுத்துருப்பதை தன்னால் அனுமதிக்க முடியாது என சொல்லி திட்டுகிறார். இதனால் அப்செட்டாகும் இனியா, இப்படியே திட்டிட்டு இருந்தீங்கன்னா நான் அந்த வீட்டுக்கு போயிடுவேன் என மிரட்டுகிறார்.
இதைக்கேட்டு பதறிப்போகும் கோபி ராதிகாவிடம் நான் என்ன பண்ணிட்டன்னு மிரட்டுறா என சொல்ல, நீங்க திட்டுனது தப்பே இல்லை என அவர் கூறுகிறார். பின்னர் ராமமூர்த்தி கோபியிடம் அட்வைஸ் மழை பொழிகிறார்.
புது பிசினஸ் தொடங்கிய பாக்யா
தன்னுடன் வேலை பார்க்கும் ஆட்களை அழைத்து கேண்டீன் ஆர்டர் கிடைக்காததால் வாங்கிய பாத்திரங்களை கொண்டு புதிதாக 24 மணி நேரமும் சாப்பாடு கிடைக்கும் வகையில் புதிதாக பிசினஸ் தொடங்கலாம் என ஐடியா தெரிவிக்க, அனைவரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
இதன்பின்னர் வீட்டுக்கு வரும் எழிலிடம் நேற்று முழுக்க எங்க போன என கேட்டு செழியனும், ஈஸ்வரியும் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அவர் கடுப்பாகிறார். பின்னர் பாக்யாவை சந்தித்து வர்ஷினியால் தான் இவ்வளவு பிரச்சினை என தெரிவிக்கிறார். இதனால் ஷாக்காகும் அவர், ஒருவேளை வர்ஷினி ஈஸ்வரியிடம் ஏதோ சொல்லியிருப்பாளோ என பாக்யா சந்தேகப்படுக்ம் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)