மேலும் அறிய
Advertisement
Baakiyalakshmi Serial August 19 :என்ன அமிர்தா இப்படி கேட்டுட்டாங்க.. கோபி பட்ட அவமானம்.. பாக்கியலட்சுமி இன்று
Baakiyalakshmi serial Today : எழிலை சந்திக்க சென்ற இடத்தில் கோபிக்கு கிடைத்தது அவமானம் மட்டுமே. பாக்கியா வீட்டில் நடக்கப்போகும் நல்ல விஷயம் என்ன?
விஜய் டிவியின் பிரபலமான சீரியலான 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 19 ) எபிசோட்டில். எழில் மற்றும் அமிர்தா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறார் கோபி. பாக்கியாவை வழக்கம்போல அவமானப்படுத்தி பேச கொந்தளித்த எழில் "உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க" என சொல்லி விடுகிறான். "அம்மா எது பண்ணாலும் அது சரியாகத்தான் இருக்கும்" என்கிறான் எழில் .
"உனக்கு என் மேல பாசம் இல்லாம இருக்கலாம். ஆனா ஒரு அப்பாவா எனக்கு பசங்க மேல அக்கறை இருக்கு. அது உனக்கு இப்போ புரியாது. உனக்கும் ஒரு குழந்தை இருக்கு. நிலா பாப்பா பெருசா ஆனதுக்கு அப்புறமா உனக்கு அந்த வலி புரியும். உனக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு" என சொல்லிவிட்டு கிளம்புகிறார் கோபி. செலவுக்காகப் பணம் கொடுக்கிறார்.
எழில் எவ்வளவு வேண்டாம் என சொல்லும் அதைக் கேட்காமல் கோபி பணத்தை கொடுத்துவிட்டு போகிறார்.
வீட்டில் அனைவரும் சோகமாக இருக்க பாக்கியா அவர்களை சமாதானப்படுத்துகிறார். எழில் வீட்டை விட்டுப் போனதற்கு நாங்கள்தான் காரணம் என செழியனும் அமிர்தாவும் குற்ற உணர்ச்சியில் வருத்தப்பட்டு பேசுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அதுபோல தப்பாக நினைக்க உங்களுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமாதானம் செய்கிறாள் பாக்யா.
தாத்தாவின் 80 ஆவது பிறந்த நாள் இன்னும் இரண்டு நாளில் வரப்போகிறது என்பது குறித்து பேசிக்கொள்கிறார்கள். சிறப்பாக செய்ய வேண்டும் என சொல்கிறாள் பாக்யா. எழில் அந்த பங்க்ஷனுக்கு வருவானா என கேட்க தாத்தா மீது அவனுக்கு அன்பும் மரியாதையும் நிறையவே இருக்கு. அதனால் நிச்சயம் வெளியில் வருவேன்.
எழில் ரூம்க்கு சென்ற பாக்கியா அவர்களை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறாள். தயக்கத்துடன் அமிர்தாவுக்கு ஃபோன் பண்ணி பேசுகிறார். அப்போது அமிர்தா பாக்கியாவிடம் "நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா அம்மா. அப்புறம் எதுக்காக எங்களை வீட்டை விட்டு போக சொன்னீங்க என கேட்கிறார். நீங்க சந்தோசமா இருக்கணும் யாரும் உங்களை. தரக்குறைவா பேசக்கூடாது. அதுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன் என சொல்கிறாள். நீங்களும் சந்தோஷமாகவும் மரியாதையாகவும் அந்த வீட்டுக்கு வருவீங்க என்கிறாள் பாக்கியா.
மறுபக்கம் கோபி கவலையுடன் வீட்டுக்கு போகிறான். ராதிகாவிடம் எழில் வீட்டை விட்டு போன விஷயத்தை சொல்லவும் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடுக்கான கண்டெண்ட்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion