Amudhavum Annalakshmiyum : குடிபோதையில் வரும் வடிவேலு...அமுதா எடுத்த முடிவு என்ன...இன்றைய எபிசோட் இதோ..!
Amudhavum Annalakshmiyum: அன்னலட்சுமி உட்பட மொத்த குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்கின்றனர். பின், அமுதாவின் முயற்சியால் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
![Amudhavum Annalakshmiyum : குடிபோதையில் வரும் வடிவேலு...அமுதா எடுத்த முடிவு என்ன...இன்றைய எபிசோட் இதோ..! amudhavum annalakshmiyum serial today episode 100 highlights Amudhavum Annalakshmiyum : குடிபோதையில் வரும் வடிவேலு...அமுதா எடுத்த முடிவு என்ன...இன்றைய எபிசோட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/328cae878c9e3d827c3c3706f55dea891667305933374102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா.
திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதனையடுத்து அமுதாவின் தங்கை உமா கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னலட்சுமி உட்பட மொத்த குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்கின்றனர். பின், அமுதாவின் முயற்சியால் அனைவரும் விடுதலை செய்யப்படும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
செந்தில் சந்தோஷமாக பைக்கின் அருகே வர அமுதா பைக்கில் ஏறாமல் ஆட்டோவில் வருகிறாள். ஆட்டோ டிரைவர் அமுதாவிடம் யாரும்மா அவரு நம்மளை பாலோ பண்ணிகிட்டே வர்றாரு என கேடகிறார். அதற்கு அமுதா எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். அடுத்து கோவிலில் இருந்து திரும்பிய சிதம்பரம் தனது மனைவியின் போட்டோ முன் நின்று, எங்க எல்லாரையும் விட அவ தான் உனக்கு பெருசா போயிட்டாளா.. எங்களை கஷ்டப்படுத்திட்டு அவ இந்த வீட்டை விட்டே போயிட்டா, ஆனா நீ அவ வச்சா தான் ஏத்துக்குற என அழுகிறார்.
View this post on Instagram
இளங்கோ விடுங்கப்பா ஏதோ ஒரு வகையில நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சுல்ல என சொல்ல, நான் ஆரம்பத்துலயே சொன்னேன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். அவ கேக்கல, எல்லாம் முடிஞ்ச பிறகு தாலியை கழட்டி குடுத்துட்டு வரச் சொன்னேன் அதையும் கேக்கலை. உங்க எல்லாரையும் விட அவ மேல தான் நான் பாசம் வச்சிருந்தேன்.. அவளே என்னை தூக்கி எறிஞ்சிட்டு அந்த பிராடு பய வீட்டுக்கு போயிட்டா என வருந்துகிறார். அவளை என்னைக்கும் நான் ஏத்துக்க மாட்டேன் என சொல்கிறார்.
இந்த பக்கம் வடிவேலு வீட்டில் பீரோவை திறந்து பணத்தை எடுக்க அன்னலட்சுமி அவனை கேள்வி கேட்கிறார். அன்னலட்சுமியை தள்ளி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வடிவேலு போக அமுதா அதை பார்த்து விடுகிறாள். பின்னர் வடிவேலு குடித்து விட்டு வீட்டுக்கு வந்து எனக்கு பணம் தர மாட்டியா, நேத்து வந்தவ உனக்கு பெருசா போயிட்டாளா என சத்தமிட.. அமுதா அவனை உள்ளே அனுமதிக்க மறுக்கிறாள். மேலும் அமுதா குடித்து விட்டு வருபவர்களுக்கு இங்கே இடம் இல்லை என சொல்ல அன்னலட்சுமி நீ சொன்னா சரி தான் என சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)