Amudhavum Annalakshmiyum: அன்னத்தை காலில் விழவைக்க பழனி செய்த காரியம்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட்!
பீரோவில் இருந்து எடுத்த நகைகளை அன்னலசுட்சுமி பையில் எடுத்து போட்டு விடுகிறான். போன் பேச சென்ற நண்பர் வந்து பேசிட்டண்டா என சொல்ல, பழனி அங்கிருந்து நகர்கிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அன்னலட்சுமி வீட்டு வேலைக்காரியாக ஓரிடத்தில் வேலைக்கு சேர அங்கு பழனி வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, அன்னலட்சுமி காபி கொண்டு வர பழனியை பார்த்ததும் ஷாக்காகி நிற்கிறாள். பழனி வெளியே வந்ததும் அன்னம் அவனிடம் “நான் வேலை பார்க்குறதை என் மருமக கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க” என கெஞ்சுகிறாள். இதையடுத்து பழனி தனது நண்பரிடம் “நம்ம அந்த குடும்பத்தை அவமானப்படுத்தி செந்திலும் அமுதாவும் என் கால்ல வந்து விழுற மாதிரி ஒரு திட்டம் வச்சிருக்கேன்” என்று சொல்கிறான்.
இங்கே மாயா செந்தில் வீட்டின் அருகிலேயே குடி வர. அமுதா மாயாவிடம் “இங்க எங்க என கேக்க, நான் இருக்குற இடம் சேப்டியே இல்லை, அதான் இங்க வீடு இருந்துச்சுன்னு கேள்விப்பட்டு இங்கயே வந்துட்டேன்” என்று சொல்கிறாள். பிறகு வீட்டிற்கு வரும் அன்னலட்சுமியிடம் அமுதா வேலை கஷ்டமா இருந்துச்சா என கேக்க, “வயசானவங்களை பார்க்குற வேலை தான், ஒண்ணும் கஷ்டமா இல்லை” என்று சமாளிக்க செந்தில் “நான் நல்லா இருந்தா நீங்க வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை” என வருத்தம் அடைகிறான்.
மாயா காபி போட்டு கொண்டு வந்து அனைவரிடமும் கொடுக்க, மாயா சென்றவுடன் அன்னலட்சுமி அமுதாவிடம் “அந்த பொண்ணு ரெண்டு நாள்ல நம்ம வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டா, அவ நமக்கு நல்ல விஷயம் பண்ணிருந்தாலும் நம்ம கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கனும்” என சொல்ல, அமுதா “எனக்கு அப்படி ஒண்ணும் தோணலை அத்தை” என்று சொல்கிறாள். அன்னலட்சுமி கதிரேசன் போட்டோ முன்பு நின்று “என் மருமக கிட்ட நான் வீட்டு வேலை பார்க்குறதை மறைச்சிட்டேன் என்னை மன்னிச்சிருங்க” என்று மன்னிப்பு கேட்கிறாள்.
பழனியும் நண்பரும் அன்னலட்சுமி வேலை பார்க்கும் வீட்டுக்கு வந்து “என் பொண்டாட்டி உன் பொண்டாட்டி நகை டிசைன் ஏதோ ஒண்ணு நல்லா இருக்குன்னு சொன்னா, அதான் அதை காட்டுனேன்னா அதே மாதிரி என் பொண்டாட்டிக்கு வாங்கி குடுத்துரலாம்னு நினைக்கேன்” என்று சொல்ல நண்பரின் மனைவி நகைகளை எடுத்து காட்டுகிறாள்.
இதையடுத்து பழனி ஒரு செயினை எடுத்துப் பார்த்து “என் பொண்டாட்டி சொன்ன நகை இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்” என சொல்ல, நண்பர் நகைகளை காட்டி பீரோவில் வைத்து பூட்டி பீரோ சாவியை அப்படியே விட்டு வைக்க, பழனி “சிங்கப்பூர்ல இருந்து நம்ம நண்பன் பேசுறான்” என சொல்லி அவனிடம் போனை குடுக்க, அவன் போனை எடுத்தபடி நகர, பழனி பீரோவில் இருந்த நகையை எடுத்து விடுகிறான்.
பீரோவில் இருந்து எடுத்த நகைகளை அன்னலசுட்சுமி பையில் எடுத்து போட்டு விடுகிறான். போன் பேச சென்ற நண்பர் வந்து பேசிட்டண்டா என சொல்ல, பழனி அங்கிருந்து நகர்கிறான். வீட்டு ஓனர் பீரோவுல சாமியை அப்படியே மறந்து வச்சுட்டு வந்துட்டனே பூட்டலையே என அங்கு வர, அங்கு அன்னலட்சுமி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க அதைப் பார்க்கிறார். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.