மேலும் அறிய

Producer V.A.Durai: விக்ரம், சூர்யா படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் மரணமடைந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் மரணமடைந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திரையுலகை பொறுத்தவரை தொடர்ச்சியாக பிரபலங்கள் மரணமடைந்து வருவது சக பிரபலங்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த இயக்குநர் ஜி மாரிமுத்து, பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தொடங்கி சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தது இன்றளவும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். 

முன்னதாக கடந்த மார்ச் மாதம் அவரது உடல் நிலை குறித்த  வீடியோ ஒன்றை வெளியாகி இருந்தது. அதில், ‘நீரிழிவு நோய் காரணமாக காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வி.ஏ.துரையின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக உதவும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவருக்கா இந்த நிலைமை என பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

வி.ஏ.துரை தமிழ் சினிமாவில் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு,லவ்லி உள்ளிட்ட 8 படங்களை தயாரித்திருந்தார். ஆனால் எந்த படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. சினிமா மீது இருந்த மோகத்தால் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்தார். அதேசமயம் கமர்ஷியல் இயக்குநர் முன்னோடி என்றழைக்கப்படும் எஸ்.பி.முத்துராமனிடம் 25 ஆண்டுகளாக உதவி இயக்குநராக இருந்தவர் வி.ஏ.துரை. 

ரஜினி நடித்த 25 படங்களில் உதவி, இணை இயக்குநராக பணியாற்றிய நிலையில், அந்த வீடியோவில் அவர் தனக்கு உதவ வேண்டும் என வி.ஏ.துரை கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து இயக்குநர் பாலா தன்னிடம் பணம் வாங்கி கொண்டு படம் எடுத்து தராமல் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே வி.ஏ.துரையின் நிலையை அறிந்த நடிகர் சூர்யா உடனடியாக 2 லட்ச ரூபாய் பண உதவி செய்தார். நடிகர் ரஜினியும் உதவியதாக தெரிவிக்கப்பட்டது. 

இப்படியான நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: சினிமா மோகத்தால் சொத்துக்கள் இழப்பு.. பணம் பெற்று ஏமாற்றிய இயக்குநர் பாலா? தயாரிப்பாளர் துரை வேதனை..

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget