மேலும் அறிய

Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்

Music Director Deva Passed Away: தேனிசை தென்றல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர். அவரின் மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனிசை தென்றல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

75 வயதான  அவர் இன்று காலை மாரடைப்பு காரணமான கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. தேவாவின் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேவாவின் இசைப்பயணம்

தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தேவா  தமிழ் , கன்னடம் , தெலுங்கு மற்றும் மலையாளம் என சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் வளர்ந்த அவர் இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சுயமாக ஹார்மோனியம் வாசிக்க கற்றுக் கொண்டார். பின்னர் மேடை இசைக் கலைஞர்களுடன் இணைந்து தன் கலையை வளர்த்துக் கொண்டார். இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து 1973ம் ஆண்டு இசைக்குழு ஒன்றை நடத்தி வந்தார் தேவா. 

தூர்தர்ஷன் பொதிகை சேனலில் பணிபுரிந்த அவர்,வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சிக்கு பாடல்களை இசையமைத்தார். 1980களின் தொடக்கத்தில் பக்தி பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கினார். குறிப்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாடல்கள் தேவா இசையில் அந்த காலக்கட்டத்தில் உருவானது. அப்படியான சமயத்தில் தான் திருவேற்காடு கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்துக் கொண்டு தேவாவின் பக்தி பாடல்களைப் பாராட்டி அவருக்கு தேனிசை தென்றல்  பட்டம் வழங்கினார். 

மனசுக்கேத்த மகராசா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரசாந்த், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார். 

கானா பாடகர்களுக்கு குரு

தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தேவா தான் அதன் குரு என்னும் சொல்லும் அளவுக்கு பட்டித்தொட்டியெங்கும் அதனைக் கொண்டு சேர்த்தார். இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகர், நடிகர் என ரசிகர்களை தன்னால் முடிந்த அளவு மகிழ்வித்தார். தன்னுடைய இசை மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் எந்தவித ஈகோவுமின்றி வந்து பாடி அவர்களின் பணிகளை புகழ்வதில் தேவாவுக்கு நிகர் அவர் தான். இப்படியான தேவா 2000த்தின் பிற்பகுதியில் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். அதேகாலக்கட்டத்தில் அவரது மகனான ஸ்ரீகாந்த் தேவாவும் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் தேவாவின் சகோதரர் சபேஷ்- முரளியும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Chennai Corporation: சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
Embed widget