![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Puspha Movie நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக களம் இறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் .
![Puspha Movie நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் Tamil Actress Ishwarya Rajesh Joined Hands With Allu Arjun in Puspha Movie Puspha Movie நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/27/1c824044986f76318f49f7822e6462a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படம் "புஸ்பா" . படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . பஹத் பாசில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . செம்மர கடத்தலை மய்யமாக வைத்து இந்தப் படம் இருக்கும் என்று டீசரில் தெரியவந்துள்ளது .
டீஸர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . 47மில்லியன் வியூஸ் மற்றும் 1.2மில்லியன் லைக்ஸ பெற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறி இருந்த நிலையில் அவரின் கதாபாத்திரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டக் ஜெகதீஸ் படத்திலும் நானிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிக்கிறார் . பன்முகம் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்,தெலுங்கு , ஹிந்தி என்று பல படங்களில் இவர் தனது திறமையை காட்டியுள்ளார் .
புஸ்பா திரைப்படம் தமிழ்,தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என்று 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது . தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)